புதுச்சேரி, கேரளம் மற்றும் அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தல் காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அஸ்ஸாம், கேரளம் ஆகிய இரண்டு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
மக்கள் வாக்களிக்க வசதியாக இன்று பள்ளி, கல்லூரி மற்று அரசு அலுவலகங்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, வெவ்வேறு ஊர்களில் உள்ளவர்களும் தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் சென்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும், கேரளத்தில் 140 தொகுதிகளிலும், அஸ்ஸாமில் 126 தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகின்றன.
காலை 11 மணி நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, புதுச்சேரியில் 37.06 சதவிகிதம், கேரளத்தில் 33.28 சதவிகிதம் மற்றும் அஸ்ஸாமில் 38.92 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர்.
முன்னதாக, 9 மணி நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, புதுச்சேரியில் 17.41 சதவிகிதம், கேரளத்தில் 16.23 சதவிகிதம் மற்றும் அஸ்ஸாமில் 17.87 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர்.
இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
Summary
Puducherry, Kerala, Assam Elections! Polling Status at 11 AM!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுவை, கேரளம், அஸ்ஸாம் தேர்தல்! வாக்குப்பதிவு நிலவரம்!

புதுவை, கேரளம், அஸ்ஸாம் தேர்தல்! மாலை 5 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

புதுவை, கேரளம், அஸ்ஸாம் தேர்தல்! பிற்பகல் 3 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

புதுவை, கேரளம், அஸ்ஸாம் தேர்தல்! பிற்பகல் 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


