மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

புதுவை, கேரளம், அஸ்ஸாம் தேர்தல்! வாக்குப்பதிவு நிலவரம்!

புதுவை, கேரளம், அஸ்ஸாம் தேர்தல் - வாக்குப்பதிவு நிலவரம் பற்றி...

News image

வாக்குப்பதிவு - படம்: ஏஎன்ஐ

Updated On :9 ஏப்ரல் 2026, 2:41 pm

புதுவை, கேரளம் மற்றும் அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அஸ்ஸாம், கேரளம் ஆகிய இரண்டு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசமான புதுவையில் சட்டப்பேரவைத் தேர்தல் இன்று(ஏப். 9) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.

பொதுமக்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர். வாக்குப்பதிவையொட்டி அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

புதுவையில் 30 தொகுதிகளுக்கும் கேரளத்தில் 140 தொகுதிகளுக்கும், அஸ்ஸாமில் 126 தொகுதிகளுக்கும் பலத்த பாதுகாப்புடன் இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது.

கேரளம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் இன்று(ஏப். 9) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

இந்த நிலையில், வாக்குப் பதிவு நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, புதுச்சேரியில் 89.65 சதவிகிதம், கேரளத்தில் 77.82 சதவிகிதம் மற்றும் அஸ்ஸாமில் 85.27 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர்.

பதிவான வாக்குகள் மே 4 ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

Summary

The Election Commission of India has released the voting status for the Legislative Assembly elections in Puducherry, Kerala, and Assam.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.