மோசடி வழக்கில் தண்டனை பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ-வை சட்டப்பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மத்தியப் பிரதேசம், போபாலில் சட்டவிரோதமாக வட்டிப் பணத்தைப் பெறுவதற்காக வங்கிக் கணக்குப் பதிவேடுகளில் முறைகேடு செய்த வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேந்திர பார்தி மாநில சட்டப்பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று சட்டப்பேரவை அலுவலர்கள் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 03) தெரிவித்தனர்.
1998 முதல் 2011 வரை சட்டவிரோத வட்டிப் பணத்தைப் பெறுவதற்காக வங்கிப் பதிவேடுகளைப் போலியாகத் தயாரித்த மோசடி வழக்கில், பார்தி மற்றும் வங்கியின் முன்னாள் ஊழியர் ஒருவருக்கு தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை (ஏப்.02) மூன்றாண்டு சிறைத் தண்டனை விதித்தது.
குற்றச் சதி, மோசடி, மதிப்புமிக்க பத்திரத்தைப் போலியாகத் தயாரித்தல் மற்றும் போலியான ஆவணத்தை உண்மையானது போலப் பயன்படுத்துதல் ஆகிய குற்றங்களுக்காக அந்த இருவரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, தலா ரூ. 1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, வியாழக்கிழமை இரவு இவ்விவகாரம் குறித்து நடைபெற்ற ஆலோசனைகளைத் தொடர்ந்து, ததியா சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து பார்தியின் உறுப்பினர் பதவியை ரத்து செய்து சட்டப்பேரவை அலுவலர்கள் அறிக்கை வெளியிட்டனர்.
முன்னதாக, 2023 சட்டப்பேரவைத் தேர்தலில், ததியா தொகுதியில் ஆளும் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ராவை பார்தி தோற்கடித்திருந்தார்.
Summary
A Congress MLA, who was convicted in a fraud case, has been disqualified from his position as a Member of the Legislative Assembly.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சாத்தான்குளம் வழக்கு: மூச்சுத் திணறி இறந்ததாக பேசியோருக்கு தண்டனை வழங்குக - கமல்

காங்கிரசில் 2 பெண் வேட்பாளர்கள் மட்டும்... | Krithika Tharan | Congress | Rahul | TN Election 2026 | Selvaperunthagai

சாத்தான்குளம்: நீதிபதி முன்பு கண்ணீர் விட்டு அழுத ஜெயராஜ்- ஃபென்னிக்ஸ் குடும்பத்தினர்!

திரிணமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. காங்கிரஸில் இணைந்தார்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



