மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. காஜி அப்துர் ரஹீம் அக்கட்சியிலிருந்து விலகிய மறுநாளே காங்கிரஸில் இணைந்துள்ளார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த நிலையில், அனைத்து தரப்பு கட்சி வேட்பாளர்களும் வேட்புமனுத் தாக்கலில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தின் பதுரியா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான ரஹீமுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதையடுத்து, அவர் தனது எம்.எல்.ஏ பதவி உள்பட கட்சியின் அனைத்துப் பதவிகளிலிருந்தும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29) ராஜிநாமா செய்தார்.
ராஜிநாமா செய்த அடுத்த நாளே, காங்கிரஸின் முக்கியத் தலைவர்கள் பலர் முன்னிலையில் அவர் காங்கிரஸில் ஐக்கியமானார். இதனைத்தொடந்து, பதுரியா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ரஹீம் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து, காஜி அப்துர் ரஹீம் பேசுகையில், “என் தந்தை 50 ஆண்டுகளாக மேற்கு வங்க அரசியலில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார். அவர் தன் வாழ்நாள் முழுவதும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராகவே இருந்தார். காங்கிரஸில் இணைவதன் மூலம் நான் என் சொந்த வீட்டுக்கே திரும்புகிறேன். இதனால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்” எனத் தெரிவித்தார்.
Summary
In West Bengal, Trinamool Congress MLA Kazi Abdur Rahim quit the party and joined the Congress the very next day.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திரிணமூல் காங்கிரஸை பெண்கள் தண்டிப்பா்: பிரதமா் மோடி

பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000! மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு
திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



