தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!

நாட்டில் அடுத்த 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது குறித்து...

News image

தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் பெட்ரோல் நிலையங்களில் அலைமோதிய கூட்டம் - பிடிஐ

Updated On :1 ஏப்ரல் 2026, 2:47 pm

நாட்டில் அடுத்த 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் தொடர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவின் தளவாடங்கள் அமைந்துள்ள நட்பு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், மேற்கு ஆசியாவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதனால் உலக நாடுகளுக்கு விநியோகிக்கப்படும் எரிபொருள் சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கு ஆசிய போர் விவகாரத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து ஆலோசிக்க அமைச்சரவைக் கூட்டம் இன்று (ஏப். 1) கூடியது.

இக்கூட்டத்திற்கு பிறகு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை செயலாளர் சுஜாதா சர்மா பேசியதாவது:

''நாட்டின் சுத்திகரிப்பு நிலையங்கள் அனைத்தும் தொடர் செயல்பாட்டில் உள்ளன. சில்லறை எண்ணெய் விற்பனையில் எந்தவித வறட்சியும் ஏற்படவில்லை.

கடந்த மாதம் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 70 டாலராக இருந்தது. இன்று 100 டாலர் வரை விற்பனை செய்யப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருந்தாலும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கான பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாது.

2022 ஏப்ரல் 6 முதல் பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. முன்பை விட ரூ. 2 குறைந்துள்ளது. இதே நிலைதான் நீடிக்கும்.

சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் விலை மாற்றத்தில் நுகர்வோர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக கலால் வரியை அரசு நீக்கியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாது என்பதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விலைகளை ஏற்ற இறக்கமின்றி சீராக வைத்திருப்பதால், நமது எண்ணெய் விற்பனை சந்தை, குறைந்த வருவாயையே ஈட்டி வருகிறது. டீசல் கிடைப்பதை உறுதி செய்ய ஏற்றுமதி வரியை அரசு அதிகரித்துள்ளது.

நமக்கு போதுமான அளவு பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளது. அதனால், பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அச்சம் காரணமாக எரிபொருள்களை முன்கூட்டியே வாங்கி வைக்க வேண்டிய அவசியமும் இல்லை'' எனக் குறிப்பிட்டார்.

Summary

India has two months of crude reserves, no fuel shortage: Centre

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.