/

இந்திரா காந்தி நினைவு நாள்: சோனியா, ராகுல் காந்தி மரியாதை!

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நாளையொட்டி ராகுல் காந்தி மரியாதை...

News image
தில்லியில் உள்ள இந்திரா காந்தியின் நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை - X / congress
Updated On :31 அக்டோபர் 2025, 4:45 am

இணையதளச் செய்திப் பிரிவு

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நாள் இன்று(அக். 31) அனுசரிக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் அவரது நினைவு நாளை அனுசரித்து வருகின்றனர்.

Story image

இந்நிலையில் தில்லியில் சக்தி ஸ்தலத்தில் உள்ள இந்திரா காந்தியின் நினைவிடத்தில் அவரது பேரனும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Story image

முன்னதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் இந்திரா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மரியாதை

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மரியாதை

summary

Leader of the Opposition Rahul Gandhi paid tributes to former Prime Minister Indira Gandhi at her memorial on her death anniversary.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.