பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

இந்திய விண்வெளியில் புதிய மைல்கல்: திரௌபதி முர்மு!

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் பயணத்தினால் முழு நாடும் உற்சாகமாகவும், பெருமையும் அடைகின்றது.

News image

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

Updated On :25 ஜூன் 2025, 9:46 am

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான ஆகஸியம்-4 பயணத்தின் ஒரு பகுதியாக, இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் நட்சத்திரங்களை நோக்கிய பயணத்தினால் முழு நாடும் உற்சாகமாகவும், பெருமையும் அடைவதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் கொண்ட குழுவுடன் ஃபால்கான்-9 ராக்கெட் புதன்கிழமை பிற்பகல் 12 மணியளவில் விண்ணில் பாய்ந்தது.

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்துக்காகத் தேர்வான வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா உள்பட நான்கு பேர் குழு தேர்வு செய்யப்பட்டிருந்தது.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள நாசாடிவன் கென்னடி விண்வெளி மையத்தில் ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கான்-9 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

இதுதொடர்பாக திரௌபதி முர்முவின் எக்ஸ் பதிவில்,

கேப்டன் சுபான்ஷு சுக்லா விண்வெளியில் இந்தியாவிற்கு ஒரு புதிய மைல்கல்லை உருவாக்கினார். நட்சத்திரங்களை நோக்கிய இந்தியரின் பயணத்தில் முழு தேசமும் உற்சாகமாகவும், பெருமையாகவும் இருக்கிறது.

குழுவினரால் மேற்கொள்ளப்படும் பரந்த அளவிலான சோதனைகள் அறிவியல் ஆய்வுகள் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியின் புதிய எல்லைகளுக்கு வழிவகுக்கும்.

சுபான்ஷு சுக்லாவுடன், அமெரிக்கா, போலந்து, ஹங்கேரியைச் சேர்ந்தவர்கள் ஆக்ஸியம் மிஷனில் பயணிப்பதால் உலகம் ஒரு குடும்பம் என்பதை நிரூபித்துள்ளார்கள்.

நாசாவிற்கும் இஸ்ரோவிற்கும் இடையிலான நீடித்த நாட்டாண்மையைப் பிரதிபலிக்கும் இந்த பணியின் வெற்றிக்கு எனது வாழ்த்துகள் என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.