கர்நாடக மாநிலத்தில் ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், முக்கிய ரயில்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தக்ஷிணா கன்னடா மாவட்டத்தின், எடக்குமாரி மற்றும் ஷிரிபகிலு ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையிலான மலைப்பகுதியிலிருந்து இன்று (ஜூன் 21) அதிகாலை பாறைகள் சரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால், அங்குள்ள சரக்கு ரயில்கள் பயன்படுத்தும் ரயில் பாதையானது முடக்கப்பட்டுள்ளதால், சாக்லெஷ்பூர் - சுப்ரமண்யா சாலை ஆகிய பிரிவுகளின் ரயில் சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து ரயில்வே துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த நிலச்சரிவால், கடகார்வல்லி வந்தடைந்த பெங்களூரு - கண்ணூர் எக்ஸ்பிரஸ், சாக்லெஷ்பூர் வந்தடைந்த பெங்களூர் - முர்தேஷ்வர் எக்ஸ்பிரஸ் மற்றும் விஜயப்புரா - மங்களூர் மத்திய எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் புறப்படுவது தாமதமாகியுள்ளதாகக் கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட ரயில்களின் பயணிகளுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை ரயில்வே அதிகாரிகள் வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: இந்தியாவிலும் விரைவில் டெஸ்லா! எப்போது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சித்திரை பெளா்ணமி: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

தெலங்கானாவில் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் திடீர் புகை!

பொறியியல் பணிகள்: ரயில்களின் சேவையில் மாற்றம்

தண்டவாளத்தில் தவறி விழுந்த பயணி: மெட்ரோ வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


