தெலங்கானாவில் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியின் சக்கரத்திலிருந்து தீப்பொறி வெளியேறியதால் பரபரப்பு காணப்பட்டது.
தெலங்கானாவின் யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியின் சக்கரத்திலிருந்து புகை மற்றும் தீப்பொறி வெளியேறியதால் ரயில் நிறுத்தப்பட்டதாக தெற்கு மத்திய ரயில்வே அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
பிரேக் பைண்டிங்(சக்கரம் சுழலாமல் பிரேக் ஜாம் ஆகுதல்) காரணமாக ஏற்பட்ட இந்த சம்பவத்தில் எந்த சேதமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என்று அவர்கள் கூறினர்.
தெற்கு மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், நேற்று ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்ட ஹைதராபாத் - தாம்பரம் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலின் S5 பெட்டியில் பிரேக் பைண்டிங் ஏற்பட்டதன் காரணமாக, ஆலேர் ரயில் நிலையத்தில் இரவு 7:47 மணிக்கு நிறுத்தப்பட்டது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
பெட்டியின் சக்கரத்தில் புகை மற்றும் தீப்பொறி காணப்பட்டதாகவும், அதை ரயில்வே ஊழியர்கள் உடனடியாக அணைத்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறகு ரயில் 20 நிமிடங்கள் தாமதமாக இரவு 8.10 மணிக்கு தாம்பரத்தை நோக்கிப் புறப்பட்டது என்றும், இதில் எந்த சேதமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என்றும் தென் மத்திய ரயில்வே கூறியுள்ளது.
Summary
Smoke and sparks emanated from a wheel of a coach of Charminar Express, prompting the train to be halted at a railway station in Yadadri Bhuvanagiri district of Telangana, SCR officials said on Sunday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி - தாம்பரம் இடையே நாளை (ஏப். 26) சிறப்பு ரயில்!

12.4.1976: ஓடும் ரயிலில் புகை - பயந்து குதித்தோரில் ஒருவர் சாவு: 17 பேர் காயம்

வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்

டிக்கெட் முன்பதிவு! ரயில்வேயின் புதிய மாற்றம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


