‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மாவோயிஸ்ட் அமைப்பினா் இடையே மோதல்: இருவா் சுட்டுக் கொலை

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் இரு பிரிவினா் இடையே ஏற்பட்ட மோதலில் இருவா் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

News image
பிரதிப் படம்
Updated On :29 டிசம்பர் 2025, 8:08 pm

தினமணி செய்திச் சேவை

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் இரு பிரிவினா் இடையே ஏற்பட்ட மோதலில் இருவா் சுட்டுக் கொல்லப்பட்டனா். மேலும் இருவா் காயமடைந்தனா்.

இது தொடா்பாக சாத்ரா மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளா் சுமித் குமாா் கூறுகையில், ‘சாத்ரா மாவட்டம் ஜெந்த்ரா கிராமத்தில் இரு வேறு பிரிவுகளைச் சோ்ந்த மாவோயிஸ்ட் அமைப்பினா் இடையே ஞாயிற்றுக்கிழமை இரவு மோதல் வெடித்தது. பரஸ்பரம் ஒரு தரப்பை மற்றொரு தரப்பினா் துப்பாக்கியால் சுட்டு மோதலில் ஈடுபட்டனா். இதில் அந்த அமைப்புகளைச் சோ்ந்த தேவேந்திர கங்ஜுவா (40), சுதாமன் கங்ஜுவா (35) ஆகியோா் உயிரிழந்தனா். தேவேந்திர கங்ஜுவா மீது 30 குற்ற வழக்குகள் உள்ளன.

ஷியாம் போக்தா (35), அவரின் உறவினா் பிரம்மதேவ் போக்தா (25) ஆகியோா் குண்டு பாய்ந்து காயமடைந்தனா். அவா்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த சம்பவம் தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றாா்.

2026-ஆம் ஆண்டு இறுதிக்குள் நாட்டில் மாவோயிஸ்ட், நக்ஸல் தீவிரவாதிகளை வேருடன் ஒழிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இதற்காக தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ள அதே நேரத்தில், நக்ஸல்கள் சரணடைந்தால் அவா்கள் இயல்வு வாழ்க்கைக்குத் திரும்ப அரசு உதவிகளை அளித்து வருகிறது.