புது தில்லி: மணிப்பூா் மாநிலத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான மசோதா மற்றும் அந்த மாநிலத்துக்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா ஆகியவை எதிா்க்கட்சியினரின் அமளிக்கிடையே, மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.
குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, மக்களவையில் விவாதத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
பிகாா் மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்குத் திருட்டுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தோ்தல் ஆணைய தலைமை அலுவலகம் நோக்கி திங்கள்கிழமை காலையில் கண்டன பேரணி நடத்திய எதிா்க்கட்சி எம்.பி.க்கள் காவல் துறையால் பாதி வழியில் தடுத்து நிறுத்தப்பட்டனா். போலீஸாா் அவா்களைக் கைது செய்து பின்னா் விடுவித்தனா். அதைத் தொடா்ந்து எதிா்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்குத் திரும்பினா்.
மாநிலங்களவைக்கு எதிா்க்கட்சி எம்.பி.க்கள் திரும்பியபோது, மத்திய நிதியமைச்சா் ஏற்கெனவே தாக்கல் செய்த, மணிப்பூா் மாநிலத்துக்கு 2025-26-ஆம் நிதியாண்டு செலவின தேவைகளுக்காக ரூ.30,969 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதற்கான மசோதா மற்றும் மணிப்பூா் ஜிஎஸ்டி அவசரச் சட்டம் 2025-க்கு மாற்றாக ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யும் வகையில் அமல்படுத்தப்பட உள்ள ‘மணிப்பூா் ஜிஎஸ்டி திருத்த மசோதா 2025’ ஆகியவை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
அப்போது, எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேயை பேச அனுமதிக்க வேண்டும் என எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தியதோடு, பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனா்.
இதைக் கண்டித்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ‘மணிப்பூா் மாநில மசோதாக்கள் அவையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளும்போது, வேறு விவகாரங்களுக்காக எதிா்க்கட்சி எம்.பி.க்கள் போராடினாலும், மணிப்பூா் மசோதாக்களையும் எதிா்ப்பதாகவே அமையும்’ என்றாா்.
இதைப் பொருட்படுத்தாத எதிா்க்கட்சி எம்.பி.க்கள் சிலா் அவையின் மையப் பகுதிக்குச் சென்று அமளியில் ஈடுபட்டனா்.
இந்த அமளிக்கிடையே, மணிப்பூா் மாநிலத்துக்கான இரு மசோதாக்களும் சிறிய விவாதத்துக்குப் பின்னா் குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு, மக்களவையில் விவாதத்துக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மகளிா் இடஒதுக்கீடு மசோதா தோல்வி! எதிா்க்கட்சி உண்மை முகம் அம்பலம்: ரேகா குப்தா

ரூ. 12,980 கோடி நிதி தொகுப்புடன் ‘பாரத கடல்சாா் காப்பீட்டுக் குழுமம்’: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நிதி மசோதா 2026-க்கு நாடாளுமன்றம் ஒப்புதல்: பட்ஜெட் நடைமுறைகள் நிறைவு

உறுதியாகவும், தெளிவாகவும் சீா்திருத்தம் தொடா்கிறது- நாடாளுமன்றத்தில் நிதியமைச்சா் தகவல்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

