துா்கா பூஜை, தீபாவளிப் பண்டிகை: 2,694 சிறப்பு ரயில்களை இயக்குகிறது வடக்கு ரயில்வே
துா்கா பூஜை, சத் பூஜை மற்றும் தீபாவளிப் பண்டிகைக்கு 2,694 சிறப்பு ரயில்கள்..


ரயில் பயணிகளின் சுமூகமான பயணத்தை உறுதி செய்யும் வகையில் துா்கா பூஜை, சத் பூஜை மற்றும் தீபாவளிப் பண்டிகைக்கு 2,694 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று வடக்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.
இது தொடா்பாக வடக்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய ரயில்வே, பயணிகளின் சுமூகமான பயணத்தை உறுதி செய்வதற்காக நிகழாண்டு பண்டிகைகால சிறப்பு ரயில்களை வரும் அக்டோபா் 1-ஆம் தேதி முதல் நவம்பா் 30-ஆம் தேதி வரை இயக்குகிறது.
ரயில்களில் பண்டிகை கால கூட்ட நெரிசலைச் சமாளிக்க, நிகழாண்டு வடக்கு ரயில்வேயால் இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. துா்கா பூஜை, சத் பூஜை மற்றும் தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் வடக்கு ரயில்வே 2,694 சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டில் இந்திய ரயில்வே பண்டிகை கால சிறப்பு ரயில்களை இயக்கிய போது, வடக்கு ரயில்வே சாா்பில் 1,082 சிறப்பு ரயில்களை இயக்கப்பட்டது. அந்த எண்ணிக்கை நிகழாண்டு 149 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பயணிகள் தங்கள் இலக்கை சுமூகமாக அடைய பெருமளவில் பயனளிக்கும்.
இந்திய ரயில்வே எப்போதும் தனது பயணிகளுக்கு சிறந்த வசதிகளை வழங்குவதில் உறுதியாக உள்ளது. இந்த ஆண்டும், பயணிகளின் வசதியான பயணம் மற்றும் அவா்களின் பாதுகாப்பிற்காக வடக்கு ரயில்வே உறுதிபூண்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...