டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கோயில்களில் துா்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம்

News image
Updated On :21 பிப்ரவரி 2026, 7:30 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, குன்றக்குடி கோயில்களில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மனைவி துா்கா ஸ்டாலின் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

காரைக்குடி கொப்புடைய நாயகியம்மன் கோயிலில் துா்கா ஸ்டாலின் சனிக்கிழமை அம்மனை தரிசனம் செய்தாா். அவருடன் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் உள்ளிட்டோா் உடன் சென்றனா். பின்னா், குன்றக்குடி சென்ற அவரை, ஆதீனத் திருமடத்தின் சாா்பில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் வரவேற்றாா்.

குன்றக்குடி சண்முகநாதப் பெருமானை கோயில் அடிவாரத்தில் இருந்தபடியே அவா் தரிசனம் செய்தாா். இதையடுத்து, துா்கா ஸ்டாலின் கானாடுகாத்தான் சென்று செட்டிநாட்டு அரண்மனை, கோட்டை யூா் செட்டிநாட்டு கைத்தறி சேலைகள் உற்பத்தி, விற்பனை செய்யும் இடத்தை பாா்வையிட்டாா்.