மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம் நடத்த வேண்டும் என மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ரவ்னீத் சிங் பிட்டு கூறுகையில்,
இந்தியாவில் ஒதுக்கீடு குறித்து சமீபத்தில் அமெரிக்கா சென்றபோது காந்தியின் பேசுக்கு பிட்டு பதிலளித்துள்ளார். ராகுல் காந்தி குருத்வாராவுக்கு பலமுறை செல்கிறார், அவரை யார் தடுப்பது? இது கட்சி விவகாரம் அல்ல, அதற்கும் மேலானது.
இதையும் படிக்க: அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி!
தலைப்பாகை அணிவதைத் தடுத்தது யார்? குருத்துவாராவுக்குச் செல்வதைத் தடுத்தது யார்? எனவே காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றால் ராகுல் காந்திக்கு எதிராக தான் போராட்டம் நடத்த வேண்டும்.
இது காங்கிரஸ் அல்லது பாஜக பற்றியது அல்ல. பஞ்சாப் மற்றும் சீக்கியர்களைப் பற்றியது. சீக்கியர் கடா அணிய அனுமதிக்கப்படுவார்களா அல்லது குருத்வாராவுக்குச் செல்லலாமா? இதுதான் பிரச்னை.. சீக்கியர்களுக்கு மட்டுமல்ல அனைத்து மதத்தினருக்கும் தான் என்று அவர் கூறினார்.
பிட்டுவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஐ அலுவலகம் முன்பாக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.
ரயில்வே மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில்துறை இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு ஜகத்புரா துப்பாக்கி சுடுதல் போட்டியில் 57வது ரயில்வே இடையேயான துப்பாக்கி சுடுதல் போட்டியை துவக்கி வைக்க வந்திருந்தார்.
ராகுலின் அமெரிக்க உரையில்..
ராகுல் காந்தி சமீபத்தில் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தபோது அவரின் உரையில், சீக்கிய சமூகம் குறித்து அவதூறு கருத்துகளைப் பேசியதாகவும், சீக்கிய சமூகத்தினரின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கு: மே 2-இல் தீா்ப்பளிக்கிறது உ.பி. நீதிமன்றம்

தமிழ்நாட்டில் இல்லாத காங்கிரஸ் பற்றி ராகுல் கவலைப்பட வேண்டும்! அண்ணாமலை

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக இன்று கருப்புக் கொடி போராட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
எப்ஸ்டீனின் நண்பர் மத்திய அமைச்சர்! காங்கிரஸ் குற்றச்சாட்டு; பாஜக மறுப்பு!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


