ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

மணிப்பூரில் மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை: அசாம் சென்றார் ஆளுநர்!

மணிப்பூரின் கூடுதல் பொறுப்பிலிருந்த ஆச்சார்யா, அஸ்ஸாம் குவஹாட்டிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

News image

மணிப்பூரில் மாணவர்கள் கலவரம்

Updated On :11 செப்டம்பர் 2024, 11:12 am

மணிப்பூரில் நிகழ்ந்துவரும் அமைதியின்மையைத் தொடர்ந்து அந்த மாநில ஆளுநர் லக்ஷமண் பிரசாத் ஆச்சார்யா இம்பாலில் இருந்து குவஹாட்டிக்குப் புறப்பட்டுச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மணிப்பூரின் கூடுதல் பொறுப்பிலிருந்தவர் ஆளுநர் லக்ஷமண் பிரசாத் ஆச்சார்யா. மாணவர்களுக்கு மத்தியில் நிகழ்ந்துவரும் தொடர் போராட்டத்தையடுத்து இன்று காலை 10 மணியளவில் மாநிலத்திலிருந்து அஸ்ஸாம் குவஹாட்டிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

செவ்வாயன்று நடைபெற்ற ஆளுநர் மாளிகை அருகே நடைபெற்ற மோதலில் 55-க்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் சிறு காயங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தாக்குதலில் பலியான பெண்

சமீபத்தில் இனக்கலவரத்தில் ஆளில்லா விமானங்கள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. செவ்வாயன்று காங்போக்பி மாவட்டத்தில் ஆயுதம் ஏந்திய இரு குழுக்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 46 வயது பெண் ஒருவர் பலியானதாக காவல் துறையினர் தெரிவித்தனர். கிராமத்திலிருந்த சில வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட நிலையில், அச்சமடைந்த மக்கள் அருகில் உள்ள காடுகளில் தஞ்சமடைந்தனர்.

இதையடுத்து மாநிலத்தில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு, தலைநகரில் பதற்றமான பகுதிகளில் தடுப்புகள் அமைத்துப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மணிப்பூரில் எதற்காகப் போராட்டம்

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்தாண்டு மே மாதத்திலிருந்து, ஓராண்டுக்கும் மேலாக மோதல்போக்கு நீடித்து வருகிறது.

மைதேயி சமூகத்தினா் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரும் நிலையில், குகி பழங்குடியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதுவே, மோதலுக்கு முக்கியக் காரணமாகும். இந்த மோதலில்

இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து, நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.

முதல்வர் உறுதி

மாநிலத்தில் நடந்துவரும் இடையூறுகள் குறித்து மாணவர்கள் தங்கள் கவலைகளைத் தெரிவித்தனர், மேலும் அவர்களின் நிலைமையை நான் உண்மையிலேயே மதிக்கிறேன். அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்களின் கல்வியில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆக்கப்பூர்வமாக விவாதித்தோம்.

இந்தப் பிரச்னைகளைத் தீர்ப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்பதை அனைத்து மாணவர்களுக்கும் உறுதியளிக்க விரும்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

தேர்வுகள் ஒத்திவைப்பு

மணிப்பூல் பல்கலைக்கழகத்தில் இளங்களை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மாற்றியமைக்கப்பட்ட தேர்வுகளுக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பல்கலைக்கழக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.