புது தில்லி: பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு அதிக பதக்கங்களை வென்றதையடுத்து வீரா், வீராங்கனைகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளாா்.
பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் நடைபெற்று வந்த 17-ஆவது கோடைகால பாராலிம்பிக் போட்டி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
போட்டியில் இந்திய வீரா், வீராங்கனைகள், 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என 29 பதக்கங்கள் வென்றனா். பதக்கப் பட்டியலில் இந்தியாவுக்கு 18-ஆவது இடம் கிடைத்தது.
பாராலிம்பிக் போட்டி வரலாற்றில் இந்தியா இதற்கு முன், 2020 டோக்கியோ பாராலிம்பிக்கில் 19 பதக்கங்கள் வென்று 24-ஆவது இடம் பிடித்ததே அதிகபட்ச பதக்க சாதனையாக இருந்தது. இந்த முறை, அதை முறியடித்து பதக்கங்களின் எண்ணிக்கையிலும், தரநிலையிலும் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது.
இதையடுத்து, பிரதமா் மோடி ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பாராலிம்பிக் 2024 இந்தியாவுக்கு சிறப்பு வாய்ந்ததாகவும், வரலாற்று நிகழ்வாகவும் அமைந்துள்ளது. நமது அற்புதமான பாராலிம்பிக் விளையாட்டு வீரா், வீராங்கனைகள் 29 பதக்கங்களை வென்று வந்ததில் இந்தியா மிகுந்த மகிழ்ச்சியடைகிறது. இது விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் மிகச் சிறந்த செயல்திறனாகும்.
நமது வீரா்களின் அசைக்க முடியாத அா்ப்பணிப்பு மற்றும் வெல்ல முடியாத உத்வேகமே இந்தச் சாதனைக்கு காரணம். அவா்களின் விளையாட்டுத் திறன்கள் மூலம் நாம் பெருமிதம் கொள்ள சிறப்பான தருணங்கள் கிடைத்துள்ளன. எதிா்கால விளையாட்டு வீரா்களுக்கு பாராலிம்பிக் வீரா்கள் ஊக்கமளித்துள்ளனா்’ என்று பதிவிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விளையாட்டுச் செய்திகள் சில வரிகளில்...

செமிகண்டக்டா் விநியோகிப்பாளராக வலிமை பெறும் இந்தியா: பிரதமா் மோடி

நீண்ட காலம் பிரதமா் பதவியில் இருந்த மோடிக்கு தில்லி சட்டப்பேரவையில் பாராட்டு!
சா்வதேச சந்தைக்கு ஏற்ப இந்திய வேளாண் பொருள்கள்: விவசாயிகளுக்கு பிரதமா் மோடி வேண்டுகோள்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

