வட தெலங்கானாவில் நான்கு நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் இன்னும் மீளாத நிலையில், பலத்த மழைக்கான எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம்(ஐஎம்டி) விடுத்துள்ளது.
வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரத்தின் கலிங்கப்பட்டினம் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கரையைக் கடந்தது. இதையொட்டி பெய்த தொடா் கனமழையால் தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், தெலங்கானாவில் மழை பாதிப்புகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16-ஆக உயர்ந்துள்ளது. மழை பாதித்த பகுதிகளில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி நேற்று ஆய்வு செய்து மழை பாதிப்புகளில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், வடக்கு தெலங்கானத்தில் மீண்டும் கனமழை எச்சரிக்கையை ஐஎம்டி விடுத்துள்ளது. அதன்படி கோமரம் பீம் ஆசிபாபாத், மஞ்சேரியல், ஜெயசங்கர் பூபாலப்பள்ளி, முலுகு மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தெலங்கானாவின் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நேற்றிரவு ஒரு சில மாவட்டங்களில் கனமழை பதிவாகியுள்ளது. சித்திப்பேட்டை, நிர்மல், நிஜாமாபாத், பெத்தபள்ளி, யாதாத்ரி புவனகிரி, கொமரம் பீம் ஆசிபாபாத், மேட்சல் மல்காஜ்கிரி ஆகிய இடங்களில் கனமழை பெய்தது.
அதிகபட்சமாக சித்திப்பேட் மாவட்டத்தில் உள்ள கோஹெடாவில் 22.3 சென்டிமீட்டர் மழையும், நிர்மல் மாவட்டத்தில் உள்ள அபுல்லாபூரில் 19.8 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. நிஜாமாபாத்தின் டோண்டுகுரு மற்றும் பெத்தபள்ளி மாவட்டத்தில் உள்ள அகேனப்பள்ளியில் 16.2 மற்றும் 12.7 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கம்மம் மற்றும் மகபூபாபாத் மாவட்டங்களில் இன்று மீண்டும் மழை பெய்து வருகிறது.
ஹைதராபாத்தில் மஞ்சள் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. 30-40 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழகத்தில் 28 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெறும்: தெலங்கானா அமைச்சா் பேச்சு

தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் சதம்

சூறைக் காற்றுடன் மழை! வயலூா் சுற்றுப் பகுதிகளில் வாழைகள் சேதம்! உரிய இழப்பீடு வழங்கப்படுமா?

சென்னையில் இடி, மின்னலுடன் கனமழை: மக்கள் மகிழ்ச்சி!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை



