வெப்பச்சலனம் காரணமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது.
கடந்த ஒரு மாதத்துக்கும் மேல் தமிழகத்தின் பல பகுதிகளில் கடும் வெய்யில் வாட்டி வதைத்து வந்தது. ஒரு சில இடங்களில் வெய்யில் சதம் அடித்தது.
இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடனும், ஆங்காங்கே காற்றுடன் சாரல் மழை பெய்து வந்தது.
திடீரென மேகங்கள் கருமையாக மாறிய நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது. இதனால் வெப்பச்சலனம் தணிந்துள்ளது.
மழைக்கு காரணம்?
சென்னையில் திடீர் மழைக்கு காரணம் புதிதாக உருவாகி இருக்கும் காற்றழுத்தத் தாழ்வு பாதையே ஆகும்.
மழைக்கு முன்னதாக உஷ்ணம் அதிகளவில் இருந்த நிலையில், கனமழைக்குப் பிறகு வெப்பச்சலனம் சற்று குறைந்துள்ளது. இந்த மழையானது அடுத்த ஒரு மணி நேரத்திற்கு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டில் முதல் கோடை மழை இதுவாகும். ஆங்காங்கே மழை தொடர்ந்தாலும், இந்த மழை தற்காலிகமானது என்றும், வரும் நாள்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் ஏப்ரல் 11 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைகாலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் அண்ணாநகர், பாடி, அம்பத்தூர் தொழிற்பேட்டை, ஆவடி, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளிலும்,
காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூரில், சுங்குவார்சத்திரம், வல்லக்கோட்டை, இருங்காட்டுக்கோட்டை, தாம்பரம், குரோம்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கள் கிண்டி, வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது.
அதேசமயம் பல்லாவரம், சேலையூர் போன்ற ஓரிரு இடங்களில் கருமேகங்கள் சூழ்ந்துள்ளதாகவும், வானம் மேகமூட்டத்துடனும் காணப்படுகிறது.
Summary
Widespread rain accompanied by thunder and lightning is occurring across Tamil Nadu due to thermal convection.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆலங்குளத்தில் இடி, மின்னலுடன் கோடை மழை

திருப்பூரில் இடி, மின்னலுடன் கனமழை: மின் விநியோகம் துண்டிப்பால் மக்கள் அவதி

கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு

மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



