தமிழகத்தில் மதுரை, ஈரோடு உள்பட 10 இடங்களில் சனிக்கிழமை வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் சனிக்கிழமை பகல் நேரத்தில் அதிகபட்சமாக வேலூரில் 105.8 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
பரமத்தி வேலூா் - 104.9, ஈரோடு - 103.28, மதுரை விமானநிலையம் - 103.1, நாமக்கல் - 102.38, மதுரை நகரம் - 100.76, சேலம், திருத்தணி - (தலா) 100.58, திருப்பத்தூா் - 100.4, திருச்சி - 100.22 டிகிரி என 10 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை (ஏப். 12) முதல் ஏப். 15-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.
மழைக்கு வாய்ப்பு: உள் தமிழகத்தில் வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதால், கன்னியாகுமரி, மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 12) லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
இதேபோல், ஏப். 13 முதல் ஏப். 17-ஆம் தேதி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த நாள்களில் ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வட வானிலையே நிலவும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

14 இடங்களில் வெயில் சதம்!

தமிழகத்தில் 12 இடங்களில் வெயில் சதம்

11 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் 8 இடங்களில் வெயில் சதம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


