ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஹரியாணா மற்றும் ஜம்மு-காஷ்மீரில் நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முடிவுகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில் ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ஹரியாணாவில் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில், பாஜக ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது.
இதையும் படிக்க: கடலோர மாவட்டங்களில் பெருமழை! வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை!
ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு முழு மனதுடன் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலத்தில் இந்தியாவின் வெற்றி அரசியலமைப்பின் வெற்றி, ஜனநாயக சுயமரியாதையின் வெற்றி என்று அவர் கூறினார்.
2019ல் அமலான 370வது பிரிவை ரத்து செய்த பிறகு ஜம்மு காஷ்மீரில் நடந்த முதல் தேர்தலில் தேசிய மாநாடு-காங்கிரஸ் கூட்டணி சிறப்பான முறையில் வெற்றி பெற்றுள்ளது. அதேசமயத்தில், ஹரியாணாவில் ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பையும், காங்கிரஸின் மறுபிரவேச நம்பிக்கையையும் முறியடித்து பாஜக ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றது.
இதையும் படிக்க: ஜம்மு - காஷ்மீர்: 2 ராணுவ வீரர்களை கடத்திச் சென்ற பயங்கரவாதிகள்!
ஹரியாணா தேர்தல் முடிவுகள் ஆய்வு
ஹரியாணா தேர்தல் முடிவுகளை காங்கிரஸ் கவனித்து வருவதாகவும், எதிர்பாராத முடிவுகளை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். பல தொகுதிகளில் இருந்து வரும் புகார்கள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் தெரிவிப்போம் என்றும் அவர் கூறினார்.
ஹரியாணா மக்கள் ஆதரவிற்கும், அயராத கடின உழைப்பிற்கும் மனமார்ந்த நன்றி. உரிமைகளுக்காகவும், சமூக மற்றும் பொருளாதார நீதிக்காகவும், உண்மைக்காகவும் தொடர்ந்து குரல் எழுப்புவோம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 4000 கி.மீ. நடந்தேன்: ராகுல் காந்தி

நான் வேகப் பந்துவீச்சாளராக உருவாக காரணம் இவர்தான்: ஆகிப் நபி

ஏ டிவிஷன் வாலிபால்: அக்னி பிரண்ட்ஸ் அணி வெற்றி

அரசியலுக்கு வந்திருக்கவில்லையெனில்.. ராகுல் பகிர்ந்த சுவாரசியம்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


