தான் வேகப் பந்துவீச்சாளராக உருவாக ஊக்கமளித்தவர் யார் என்பது குறித்து ஜம்மு - காஷ்மீர் வீரர் ஆகிப் நபி மனம் திறந்துள்ளார்.
உள்ளூர் போட்டிகளில் ஜம்மு காஷ்மீர் அணிக்காக வேகப் பந்துவீச்சாளர் ஆகிப் நபி மிகவும் அபாரமாக செயல்பட்டு வருகிறார். அண்மையில், ரஞ்சி கோப்பையில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஜம்மு - காஷ்மீர் அணியில் ஆகிப் நபி மிகவும் முக்கிய வீரராக இருந்தார். ஐபிஎல் தொடரில் அவர் தில்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.
இந்த நிலையில், அதிவேக பந்துவீச்சில் பந்தை ஸ்விங் செய்யக் கூடிய தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் தான் வேகப் பந்துவீச்சாளராக உருவாக ஊக்கமளித்தாக ஜம்மு - காஷ்மீர் வீரர் ஆகிப் நபி மனம் திறந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: என்னுடைய இளம் வயதில் டேல் ஸ்டெயின் பந்துவீசுவதை விரும்பிப் பார்ப்பேன். அதிவேகப் பந்துவீச்சில் பந்தை ஸ்விங் செய்யும் அவரது திறமை வேகப் பந்துவீச்சு மீதான என்னுடைய ஆர்வத்தை அதிகரித்தது. அவரது பந்துவீச்சு மீதான ஈர்ப்பு என்னை வேகப் பந்துவீச்சாளராக உருவாக ஊக்கமளித்தது. ஒரு நாள் இந்திய அணிக்காக விளையாடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.
என்னுடைய தந்தை நான் மருத்துவராக வேண்டும் என நினைத்தார். தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடியதால் அவரிடம் நான் எப்போதும் திட்டு வாங்கிக் கொண்டிருப்பேன். நான் கிரிக்கெட் விளையாடுவதற்கு அவர் ஆதரவளிக்கவில்லை. இர்பான் பதான் ஜம்மு - காஷ்மீர் அணிக்கான ஆலோசகராக இணைந்தபோது, ஜம்மு - காஷ்மீர் அணிக்காக நான் அறிமுக வீரராக களமிறங்க அவர் உதவினார். அவர் எனக்கு ஒரு வழிகாட்டியாக இருந்து நிறைய உதவிகள் செய்தார் என்றார்.
தில்லி அருண் ஜெட்லி திடலில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக நாளை நடைபெறும் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணியில் ஆகிப் நபிக்கு வாய்ப்பளிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
Summary
Jammu and Kashmir cricketer Aquib Nabi has opened up about who inspired him to become a fast bowler.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கேவுக்கு எதிரான வெற்றி ஹைதராபாதுக்கான திருப்பு முனை: டேல் ஸ்டெயின்

வரலாறு படைக்கும் காஷ்மீர்!

ரஞ்சி கோப்பையின் தொடர் நாயகன்..! யார் இந்த ஆகிப் நபி?

ஆகிப் நபி 5 விக்கெட்டுகள்: 293 ரன்களுக்கு ஆல் அவுட்டான கர்நாடகம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



