தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், தேசிய செய்தித் தொடர்பாளருமான பிரியங்கா கக்கர் புதன்கிழமை தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும். அதீத நம்பிக்கை கொண்ட காங்கிரûஸயும், திமிர் பிடித்த பாஜகவையும் நாங்கள் தனித்து எதிர்த்துப் போராடும் திறன் கொண்டவர்கள். அண்மையில் நடைபெற்ற ஹரியாணா பேரவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளை காங்கிரஸ் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதன், அதீத நம்பிக்கையின் காரணமாக இறுதியில் தோல்வியைச் சந்தித்தது. கடந்த 10 ஆண்டுகளாக தில்லி சட்டப்பேரவையில் காங்கிரஸுக்கு பூஜ்ஜிய இடங்களே இருந்தன. இருப்பினும், 2024 மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸுடன் 3 இடங்களை பகிர்ந்து கொண்டது.
இதையும் படிக்க: பாலிவுட்டில் அறிமுகமாகும் மடோன் அஸ்வின்?
ஹரியாணாவில் கூட்டணி அமைக்க "இண்டியா' கட்சிகள் எடுத்த அனைத்து முயற்சிகளையும் காங்கிரஸ் முறியடித்தது. கூட்டாளிகளை தங்களுடன் அழைத்துச் செல்வது அவசியம் என்று காங்கிரஸ் நினைக்கவில்லை. ஆம் ஆத்மியும், காங்கிரஸும் தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஹரியாணாவில் பேரவைத் தேர்தலுக்கு முன் கூட்டணி அமைக்கத் தவறிவிட்டன. ஆம் ஆத்மி ஹரியாணாவில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தாலும், காங்கிரஸ் பெரும்பான்மையை விட மிகக் குறைந்துவிட்டது. இது, ஆளும் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதற்கு வழிவகுத்துள்ளது.
இதையும் படிக்க: பிரதமர் மோடியுடன் ஹரியாணா முதல்வர் சந்திப்பு!
ஜம்மு}காஷ்மீரின் தோடா தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதற்கு கட்சியின் வளர்ச்சி சார்ந்த அரசியலே காரணம். வெற்றி பெற்ற வேட்பாளர் மெஹ்ராஜ் மாலிக், மிகவும் கடினமாக உழைக்கும் நபர். ஆம் ஆத்மி கட்சியின் இயக்கம் மற்றும் போராட்ட காலத்தில் இருந்தே அவர் கட்சியுடன் பயணிப்பவர். அவரை கௌரவிக்க ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை (செப்.10) ஜம்மு காஷ்மீர் செல்ல உள்ளார் என்றார் பிரியங்கா கக்கர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?
தமிழகத்தில் 5-ல் 1 வேட்பாளர் மீது கிரிமினல் குற்ற வழக்கு பதிவாகியுள்ளது!

புதுச்சேரி பேரவைத் தேர்தலில் 41% கோடீஸ்வர வேட்பாளர்கள்!

கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

