தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் கூறினார்.

News image

Shahbaz Khan

Updated On :7 மே 2024, 8:52 am

இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து மத்தியில் ஆட்சி அதிகாரத்துக்குக் கொண்டுவந்தால் கோடிக்கணக்கான ஏழை மக்களை லட்சாதிபதியாக்குவோம், ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் வழங்குவோம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

சாய்பாஸா பகுதியில் உள்ள டாடா கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற முதல் கூட்டத்தில் பேசிய எம்.பி. ராகுல் காந்தி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளர் ஜோபா மஞ்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, பழங்குடியினர், ஏழைகள், பின்தங்கியவர்களின் உரிமையைப் பாதுகாப்பதற்கான தேர்தலாகும் இது. அரசியலமைப்பையே பாஜக அழிக்க நினைக்கிறது என்றும் ராகுல் கூறினார்.

நமது நாட்டின் நீர், நிலம், காடு என அனைத்தையும் 14 - 15 தொழிலதிபர்களுக்கே வழங்கிவிட வேண்டும் என்று பிரதமர் மோடி நினைக்கிறார்.

காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்தால், இட ஒதுக்கீட்டை 50 சதவீதம் என்ற அளவுக்கு உயர்த்துவோம். ஜார்க்கண்ட் மாநில பழங்குடியின முதல்வர் ஹேமந்த் சோரனை பாஜக சிறையில் அடைத்துள்ளது. அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றார்.

பிற்பகல் 2 மணியளவில், கும்லாவின் பசியா பகுதியில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்று பிரசாரம் செய்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.