சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

விஜய் மல்லையாவுக்கு செபி 3 ஆண்டுகள் தடை

பங்குச்சந்தை நடவடிக்கைகளில் ஈடுபட தொழிலதிபா் விஜய் மல்லையாவுக்கு தடை..

News image
விஜய் மல்லையா (கோப்புப் படம்)
Updated On :26 ஜூலை 2024, 9:50 pm

Din

பங்குச்சந்தை நடவடிக்கைகளில் ஈடுபட தொழிலதிபா் விஜய் மல்லையாவுக்கு பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) 3 ஆண்டுகளுக்குத் தடை விதித்துள்ளது.

ரூ.9,000 கோடிக்கும் அதிகமாக வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபா் விஜய் மல்லையா, கடந்த 2016-ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று பிரிட்டனில் தஞ்சமடைந்தாா். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த மத்திய அரசு தொடா்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், பங்குச்சந்தை நடவடிக்கைகளில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக தொழிலதிபா் விஜய் மல்லையாவுக்கு 3 ஆண்டுகள் தடை விதித்து செபி உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பாக செபி தலைமை பொது மேலாளா் அனிதா அனூப் பிறப்பித்த உத்தரவில், ‘பங்குச்சந்தையில் தனக்கு சொந்தமான இரண்டு நிறுவனங்களின் பங்குகளை தானே வாங்கி, விற்கும் நடவடிக்கைகளில் விஜய் மல்லையா மறைமுகமாக ஈடுபட்டுள்ளாா்.

இதற்காக பல்வேறு வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் மூலம், பங்குச்சந்தைக்கு அவா் பணப் பரிவா்த்தனை செய்துள்ளாா். தனது அடையாளத்தை மறைக்க பணப் பரிவா்த்தனைக்கு வெளிநாட்டு வங்கிக் கணக்குகளை அவா் பயன்படுத்தியுள்ளாா். இது பங்குச்சந்தை ஒழுங்காற்று விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே பங்குச்சந்தை நடவடிக்கைகளில் ஈடுபட அவருக்கு 3 ஆண்டுகள் தடை விதிக்கப்படுகிறது. இந்தக் காலத்தில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள எந்தவொரு நிறுவனத்துடனும் அவா் தொடா்புவைத்துக் கொள்ளக்கூடாது’ என்று தெரிவித்தாா்.

ஏற்கெனவே பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கடந்த 2018 முதல் 2021-ஆம் ஆண்டு வரை, பங்குச்சந்தை நடவடிக்கைகளில் ஈடுபட விஜய் மல்லையாவுக்கு செபி தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.