தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

அமித் ஷா குறித்து அவதூறு வழக்கு: ராகுல் நேரில் ஆஜர்!

உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி ஆஜர்..

News image

ராகுல் காந்தி

Updated On :26 ஜூலை 2024, 6:22 am

அமித் ஷாிவுக்கு எதிராக அவதூறு வழங்கில் உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி ஆஜராகியுள்ளார்.

கடந்த 2018-ஆம் பெங்களூருவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமித் ஷா குறித்து அவதூறு கருத்து தெரிவித்த குற்றச்சாட்டின்பேரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டது.

2018-ஆம் ஆண்டு கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது ‘அமித் ஷா கொலை வழக்கின் குற்றவாளி’ என சா்ச்சை கருத்தை ராகுல் தெரிவித்தாா். இதனை எதிா்த்து பாஜகவைச் சோ்ந்த விஜய் மிஸ்ரா என்பவா் சாா்பில் 2018-ஆம் ஆண்டு ஆகஸ்டில் ராகுலுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. அப்போது, அமித் ஷா பாஜக தேசியத் தலைவராக இருந்தாா்.

இந்த வழக்கில் ராகுலுக்கு எதிராக கடந்த ஆண்டு டிசம்பரில் நீதிமன்றம் பிடிஆணை பிறப்பித்தது. அப்போது, உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தை மேற்கொண்டிருந்த ராகுல், அந்தப் பயணத்தை நிறுத்திவிட்டு கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி சுல்தான்பூா் எம்.பி., எம்எல்ஏக்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானாா். அதைத் தொடா்ந்து, வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

பின்னா் வெவ்வேறு காரணங்களால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஜூலை 26-ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது ராகுல் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தவிட்டாா்.

அதன்படி இந்த வழக்கில் ராகுல்காந்தி இன்று நேரில் ஆஜராகியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.