புது தில்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவிருக்கிறார்.
மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 6வது நிதிநிலை அறிக்கை இதுவாகும். ஏற்கனவே ஐந்து நிதிநிலை அறிக்கைகளை தாக்கல் செய்திருக்கும் இவர் ஆறாவது முறையாக இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல்செய்யவிருக்கிறார். இதற்கு முன்பு, முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் மட்டுமே மத்திய நிதிநிலை அறிக்கையை ஆறு முறை தாக்கல் செய்திருக்கிறார்.
பிப்ரவரி 1 ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதன் மூலம், நிர்மலா சீதாராமன் தனது முன்னோடிகளான மன்மோகன் சிங், அருண் ஜெட்லி, பா சிதம்பரம் மற்றும் யஷ்வந்த் சின்ஹா போன்றவர்கள் இதுவரை ஐந்து முறை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து படைத்த சாதனைகளை முறியடிப்பார் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்க.. அம்மாவின் வாசனை.. வெளிவராத பவதாரணியின் பாடலை வெளியிட்ட கனிமொழி
மொரார்ஜி தேசாய் நிதியமைச்சராக இருந்த போது, 1959 - 1964ஆம் ஆண்டு வரை ஐந்து நிதிநிலை அறிக்கைகளையும் ஒரு இடைக்கால நிதிநிலை அறிக்கையையும் தாக்கல் செய்துள்ளார்.
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவிருக்கும் இந்த நிதிநிலை அறிக்கையில் பெரிதாக எந்த அறிவிப்புகளும் இடம்பெற்றிருக்காது என்று ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.
அதாவது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிப்.1, 2024-ல் சமர்ப்பிக்கப்படும் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் எந்தவித அறிவிப்பும் இருக்காது, மே மாதத்தில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலை முன்னிட்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், “தேர்தல் நடைபெறவிருப்பதால் பிப்.1, 2024 நிதிநிலை அறிக்கை (வோட் ஆன் அக்கவுண்ட்) புதிய வரிவிதிப்பின்றி அறிவிக்கப்படும். அதில் அடுத்த ஆட்சி அமையவிருக்கும்வரை அரசு எதிர்கொள்ளவிருக்கும் செலவினங்கள் மட்டுமே பட்டியலிடப்படும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஒவ்வொரு ஆண்டும் இடைக்கால நிதிநிலை அறிக்கையை நாட்டின் நிதியமைச்சர் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதும் விவாதங்கள் மற்றும் அவையின் ஏற்புக்குப் பிறகு ஏப்.1 முதல் அமலுக்கு வருவதும் வழக்கம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


