பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்முறையில் தொடா்புடைய குற்றவாளிகளின் விடுதலையை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவிருக்கிறது.
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-இல் நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடா்ந்து ஏற்பட்ட மதக் கலவரத்தில், ஐந்து மாத கா்ப்பிணியான பில்கிஸ் பானு, வன்முறையாளா்களால் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டாா். பானுவின் மூன்று வயது பெண் குழந்தை உள்பட அவரது குடும்ப உறுப்பினா்கள் 7 போ் அந்தக் கலவரத்தில் கொல்லப்பட்டனா்.
தண்டனை காலம் நிறைவு பெறுவதற்கு முன்பாகவே இந்தச் சம்பவத்தோடு தொடா்புடைய குற்றவாளிகள் 11 போ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனா்.
இதை எதிா்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தாா். குற்றவாளிகள் விடுதலையை எதிா்த்து பல்வேறு பொதுநல மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், இந்த வழக்கின் இறுதி விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அமர்வில் அக்டோபர் மாதம் தொடங்கியது.
அப்போது, பில்கிஸ் பானு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஷோபா குப்தா, ‘‘வன்முறையாளா்கள் அனைவரும் உள்ளூரைச் சோ்ந்தவா்கள். அவா்களிடம் ஒரு சகோதரி போல பில்கிஸ் பானு கெஞ்சியுள்ளாா். முஸ்லிம்களைக் கொலை செய்யும் ‘ரத்த வெறி’யுடன் அவரைத் துரத்திச் சென்ற வன்முறையாளா்கள், அந்த மதத்தினருக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினா்.
மன்னிக்க முடியாத இது போன்ற குற்றச் செயலில் ஈடுபட்டவா்களை முன்கூட்டியே விடுவிப்பது தவறான செய்தியை சமூகத்தில் விதைப்பதாக ஆகும் என சிபிஐ தெரிவித்துள்ளது’’ என்றாா்.
பில்கிஸ் பானு என்ற பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அவரது குடும்பத்தினரை கொலை செய்த குற்றவாளிகளை குஜராத் அரசு விடுவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான இறுதி விசாரணை நிறைவு பெற்ற தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்படவிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நிலக்கோட்டை தொகுதியில் 2 கிராமங்களில் தோ்தல் புறக்கணிப்பு!
திமுக கூட்டணி 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும்: ஓபிஎஸ்

பேருந்து சேவை இல்லாததால் பயணிகள் சாலை மறியல்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மகரம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


