புது தில்லி: நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கி, மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, வரும் 10ஆம் தேதியுடன் நிறைவுபெறவிருக்கிறது.
விரைவில் மக்களவைக்குத் தேர்தல் நடைபெறவிருப்பதால் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் காரசார விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், மாநிலங்களவையிலிருந்து ஓய்வுபெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரியாவிடை அளித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
பிரதமர் மோடி பேசும்போது, எம்.பி. பதவி நிறைவடையவிருக்கும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து பாராட்டிப் பேசினார். அதாவது, மாநிலங்களவையிலிருந்து ஓய்வுபெறும் உறுப்பினர்கள் இந்த நாட்டின் சொத்து. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆறுமுறை இந்த அவையில் உறுப்பினராக இருந்து அலங்கரித்துள்ளார். கரோனா காலத்தில் அனைத்து எம்.பி.க்களும் ஒன்றுபட்டு உறுதுணையாக இருந்தது இங்கே நினைவுகூரத்தக்கது.
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முன்னுதாரணமாக மன்மோகன் சிங் திகழ்ந்தார். முக்கியமான மசோதாக்கள் மீதான வாக்கெடுப்புகளின்போது, உடல் நலம் குன்றியிருந்தபோது கூட, சக்கர நாற்காலியில் வந்து தனது கடைமையை மன்மோகன் சிங் நிறைவேற்றினார். ஓய்வுபெறவிருக்கும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வணக்கம் செலுத்திக்கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டார்.
டாக்டர் மன்மோகன் சிங், ஒரு தலைவராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் அவரது விலைமதிப்பற்ற சிந்தனைகளால், அவையில் அவர் ஆற்றிய பங்களிப்பை இன்று நினைவுகூர விரும்புகிறேன். இவ்வளவு காலமாக, அவர் இந்த அவையையும் நாட்டையும் வழிநடத்திய விதத்துக்காக மன்மோகன் சிங் என்றென்றும் நினைவுகூரப்படுவார் என்றும் பிரதமர் மோடி மாநிலங்களவையில் தனது உரையின் போது கூறினார்.
மேலும், ஓய்வுபெறும் எம்.பி.க்களின் அனுபவங்கள் இந்த நாட்டுக்கு உதவும். புதிய தலைமுறைக்கு உத்வேகத்தை அளிக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


