தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

திரிபுராவில் கோயில் சிலை சேதம்: வீடுகளுக்கு தீவைப்பால் பதற்றம்

திரிபுராவில் கோயில் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, 12 வீடுகள் மற்றும் சில வாகனங்களுக்கு விஷமிகள் தீவைத்ததால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

News image

மேற்கு திரிபுரா மாவட்டத்தில் விஷமிகளால் தீக்கரையாக்கப்பட்ட வீடு.

Updated On :26 ஆகஸ்ட் 2024, 8:50 pm

அகர்தலா: திரிபுராவில் கோயில் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, 12 வீடுகள் மற்றும் சில வாகனங்களுக்கு விஷமிகள் தீவைத்ததால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இது தொடர்பாக திரிபுரா மாநில காவல்துறை துணை ஐஜி (சட்டம்}ஒழுங்கு) அனந்தா தாஸ், பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:

மேற்கு திரிபுரா மாவட்டத்தின் ராணிர்பஜார் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் காளி சிலையின் முகம் சிலரால் சேதப்படுத்தப்பட்டது. இச்சம்பவத்தின் எதிரொலியாக, ராணிர்பஜார் பகுதியில் 12 வீடுகள் மற்றும் சில வாகனங்களுக்கு அடையாளம் தெரியாத விஷமிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு தீவைத்தனர். எனினும் இந்தச் சம்பவத்தில் உயிரிழப்போ யாருக்கும் காயமோ ஏற்படவில்லை.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பகுதியில் பதற்றத்தைத் தணிப்பதற்காக பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. அப்பகுதியை உளவுத்துறை டிஜிபி அனுராக் தன்கரும், மேற்கு திரிபுரா காவல் கண்காணிப்பாளர் கிரண்குமாரும் பார்வையிட்டனர்.

சொத்துகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை மதிப்பிடும் பணி முடிந்ததும் இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்யும். சம்பந்தப்பட்ட பகுதியில் நிலைமை கட்டுக்குள் உள்ளது என்றார் அவர்.

வீடுகளுக்கு தீவைத்த சம்பவத்தைத் தொடர்ந்து ராணிர்பஜார் பகுதியை உள்ளடங்கிய ஜிரானியா வட்டாரத்தில் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஷால் குமார் தெரிவித்துள்ளார். இந்தத் தடை உத்தரவின்படி பொது இடங்களில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒன்றுகூட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, திப்ரா மோத்தா கட்சித் தலைவர் பிரத்யோத் கிஷோர் மாணிக்ய தேவ்வர்மா, முகநூலில் வெளியிட்ட பதிவில் "வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் கவலை அளிக்கிறது. சட்டம்}ஒழுங்கைப் பராமரிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

திரிபுராவில் கடந்த 19}ஆம் தேதி முதல் ஏற்பட்ட பெருவெள்ளத்தைத் தொடர்ந்து 26 பேர் உயிரிழந்துவிட்டனர்; 1.17 லட்சம் பேர் வீடுகளை இழந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கு திரிபுரா மாவட்டத்தில் விஷமிகளால் தீக்கிரையாக்கப்பட்ட வீடு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.