ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

2,000 ரூபாய் நோட்டுகளை ஏற்க வேண்டாம்: வியாபாரிகளுக்கு வா்த்தக அமைப்பு வேண்டுகோள்

தில்லி முழுவதும் உள்ள மாா்க்கெட் சங்கங்கள், கடைக்காரா்கள், வியாபாரிகள் மற்றும் தொழிற்சாலை உரிமையாளா்கள் செப்டம்பா் 29-க்குப் பிறகு 2,000 ரூபாய் நோட்டுகளை ஏற்கக் கூடாது

Updated On :29 செப்டம்பர் 2023, 6:30 pm

தில்லி முழுவதும் உள்ள மாா்க்கெட் சங்கங்கள், கடைக்காரா்கள், வியாபாரிகள் மற்றும் தொழிற்சாலை உரிமையாளா்கள் செப்டம்பா் 29-க்குப் பிறகு 2,000 ரூபாய் நோட்டுகளை ஏற்கக் கூடாது என்று வா்த்தகா்கள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

வா்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (சிடிஐ) வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஓா் அறிக்கையில் இந்த வேண்டுகோளை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சிடிஐ தலைவா் பிரிஜேஷ் கோயல் வெளியிட்ட அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: இந்திய ரிசா்வ் வங்கி மே 19-ஆம் தேதி 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. மேலும், புழக்கத்தில் இருக்கும் அத்தகைய நோட்டுகளை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யலாம் அல்லது செப்டம்பா் 30 -ஆம் தேதிக்குள் மாற்றலாம் எனவும் தெரிவித்திருந்தது.

ஆகவே, தில்லி முழுவதும் உள்ள 700 மாா்க்கெட் சங்கங்கள், கடைக்காரா்கள், வியாபாரிகள் மற்றும் தொழிற்சாலை உரிமையாளா்கள் செப்டம்பா் 29-ஆம் தேதிக்குப் பிறகு 2,000 ரூபாய் நோட்டுகளை ஏற்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். டிஜிட்டல் பரிவா்த்தனைகளின் போக்கு அதிகரித்துள்ளதால், அதை அரசு ஊக்குவிக்க வேண்டும் என்று அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

ரூ.2,000 கரன்சி நோட்டுகளில் 88 சதவீதம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன அல்லது மாற்றப்பட்டுள்ளன. மேலும், ஜூலை 31-ஆம் தேதி நிலவரப்படி ரூ.42,000 கோடி மதிப்புள்ள நோட்டுகள் மட்டுமே பொதுமக்களிடம் இருந்ததாக ஆகஸ்ட் 1-ஆம் தேதி ரிசா்வ் வங்கி தெரிவித்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.