டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ம.பி.யில் உணவு விஷமானது: 100 மாணவர்கள் உடல்நல பாதிப்பு!

மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியரில் உள்ள அரசு நடத்தும் உடற்கல்வி நிறுவனத்தில் உணவு சாப்பிட்ட சுமார் 100 மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். 

News image
கோப்புப்படம்
Updated On :2 பிப்ரவரி 2024, 3:05 am

DIN

மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியரில் உள்ள அரசு நடத்தும் உடற்கல்வி நிறுவனத்தில் உணவு சாப்பிட்ட சுமார் 100 மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். 

குவாலியரில் லட்சுமிபாய் தேசிய உடற்கல்வி நிறுவனத்தில் பரிமாறப்பட்ட பன்னீர்  சப்ஜி உணவால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சுமார் 100 மாணவர்கள் அரசு நடத்தும் ஜெயரோக்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. உணவு விஷமாகியிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்

இந்த நிறுவனத்தின் பதிவாளர் அமித் யாதவ் கூறுகையில், 

சில மாணவர்கள் செவ்வாய்க்கிழமை உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும், அவர்கள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

மாணவர்கள் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகின்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.