கேரளத்தில் இடி மற்றும் மின்னலுடன் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், தெற்கு மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்போர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இடுக்கி, பத்தனம்திட்டா மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளில் கனமழை காரணமாக நிலச்சரிவுகளும் நேரிட்டுள்ளன. கனமழை காரணமாக வெள்ளநீர் தேங்கியிருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல கிராமங்கள் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க.. மூடப்படும் கேட்.. கிரீடத்தை இழக்கப்போகிறதா சென்னை?
கனமழை காரணமாக கேரளத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், பத்தனம்திட்டாவில் பெரும்பாலான ஆறுகள் அபாய அளவில் ஓடிக்கொண்டிருப்பது மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. சிவப்பு எச்சரிக்கை என்பது 24 மணி நேரத்தில் 20 செ.மீ.க்கும் அதிகமான மழை பெய்யும் என்பதை காட்டுகிறது குறிப்பிடத்தக்கது.
தமிழகம், அதையொட்டியுள்ள கேரளப் பகுதிகளில் மேல் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. புதன்கிழமை காலை வரை அதிகபட்சமாக திருப்பூரில் 170 மி.மீ. மழை பதிவானது. மேலும், 15 இடங்களில் பலத்த மழையும் 5 இடங்களில் மிக பலத்த மழையும் பெய்துள்ளது.
இந்த நிலையில் வங்கக் கடலில் தெற்கு அந்தமான் கடல், அதையொட்டியுள்ள பகுதியில் நவ. 26-ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து நவ.27-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல், அதையொட்டிய அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அது ஆந்திர கைரையை நோக்கி நகரக்கூடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளில் கூடுதல் வாக்குப் பதிவு

திமுகவின் வெற்றி உறுதி: அமைச்சா் பி. மூா்த்தி

பழங்குடியினா் தோ்தல் புறக்கணிப்பு: பேச்சுவாா்த்தைக்குப் பின் சமரசம்
மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: ஹெச். ராஜா
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


