வாராணசி: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சனிக்கிழமை காலை காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். இதன் மூலம் கடந்த 6 ஆண்டுகளில் 100வது முறை காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்ற முதல் உத்தரப்பிரதேச முதல்வர் என்ற பெருமையை யோகி ஆதித்யநாத் பெறுகிறார்.
உத்தரப்பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் கடந்த 2017ஆம் ஆண்டு பதவியேற்றது முதல் 21 நாள்களுக்கு ஒரு முறை காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வந்து, மாநில மற்றும் நாட்டு மக்களின் நலன் வேண்டி பிரார்த்தனை செய்துகொண்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
வாராணசியில் எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும், ஆய்வுப் பணிகள் மேற்கொண்டாலும், குறைந்தது மாதத்தில் ஒரு முறையாவது அவர் காசி விஸ்வநாதரை தரிசிப்பது வழக்கம். அந்த வகையில், கடந்த 2017 முதல் மார்ச் 2022 வரை 74 முறை கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் மேற்கொண்டுள்ளார்.
பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் 100வது முறையாக வாராணசிக்கு வருகை தந்த முதல்வர் யோகி, 88வது முறையாக கோயிலுக்குச் சென்றார். அதன் பிறகு இன்று மார்ச் 18 வரை அவர் 12 முறை கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் மேற்கொண்டார். அதன்படி, இன்று காலை அவர் 100வது முறையாக காசி விஸ்வநாதரை தரிசித்தது குறிப்பிடத்தக்கது. அதனுடன் 100வது முறையாக கால பைரவரையும் அவர் தரிசித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


