நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மும்பையில் கடற்படை ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்

இந்திய கடற்படைக்குச் சொந்தமான இலகுரக ஹெலிகாப்டர், மும்பை கடற்கரைப் பகுதியில் இன்று காலை விபத்தில் சிக்கியது.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 6:41 am

ANI


புது தில்லி: இந்திய கடற்படைக்குச் சொந்தமான இலகுரக ஹெலிகாப்டர், மும்பை கடற்கரைப் பகுதியில் இன்று காலை விபத்தில் சிக்கியது.

ஹெலிகாப்டரில் இருந்த மூன்று கடற்படை வீரர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

மும்பை கடற்கரைப் பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான இலகுரக ஹெலிகாப்டர் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டதாகவும், விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக செயல்பட்டு, மீட்புப் பணிகளை துரிதப்படுத்தியதால், மூன்று வீரர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.