தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஹிந்து கோயிலில் திருமணம் செய்துகொண்ட இஸ்லாமிய தம்பதியர்!

மதநல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் சிம்லாவை சேர்ந்த ஹிந்து கோயிலில் இஸ்லாமிய தம்பதியர் திருமணம் செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளது. 

News image
Updated On :7 மார்ச் 2023, 9:13 am

மதநல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் சிம்லாவை சேர்ந்த ஹிந்து கோயிலில் இஸ்லாமிய தம்பதியர் திருமணம் செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளது. 

ஹிமாச்சலின், சிம்லா மாவட்டத்தில் ராம்பூர் பகுதியில் சத்ய நாராயணன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வகித்து வருகிறது. சத்தியநாராயணன் கோயிலில் திருமணம் செய்துகொள்ள இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ராகுல் ஷேக் மற்றும் நிமாயத் மாலிக் விருப்பம் தெரித்தனர். இதற்கு கோயில் சார்பிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி இஸ்லாமிய தம்பதியருக்கு மார்ச் 3-ம் தேதி திருமணம் நடைபெற்றது. 

இதுகுறித்து கோயில் செயலாளர் வினய் சர்மா கூறுகையில், 

எங்கள் கோயிலில் முதன்முறையாக இஸ்லாமிய தம்பதியர்களின் திருமணம் நடைபெறுகிறது. 

சத்தியநாரயணன் கோயில் நிர்வாகத்தை விஷ்வபரிஷத் கவனித்து வருகிறது. கோயில் வளாகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அலுவலகம் செயல்படுகிறது. ஹிந்து பரிஷத் ஆர்ஆர்எஸ் அமைப்புகள் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று சொல்லப்படுகிறது. 

இதை பொய்யாக்கும் வகையில் ஹிந்து கோயிலில் இஸ்லாமிய திருமணம் நடைபெற்றுள்ளது. திருமண விழா இஸ்லாமிய பாரம்பரியத்தின் முறைப்படி நடைபெற்றாலும், இந்து முறைப்படி சைவ உணவே பரிமாறப்பட்டது 
இத்திருமணத்தில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் கலந்துகொண்டனர். 

மணப்பெண்ணின் தந்தை மகேந்தி மாலிக் கூறுகையில், 

இந்த திருமணத்தைக் கோயில் வளாகத்தில் செய்வதன் நோக்கம் மத நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தின் செய்தியை பரப்புவதாகும். கோயில் நிர்வாகிகள் திருமணத்துக்கு முழு ஒத்துழைப்பு அளித்தனர்.

புதுமணத் தம்பதிகளில் மணமகன் கட்டடப் பொறியாளா். மணமகள் எம்.டெக் பட்டதாரி ஆவாா். இருவீட்டார் மற்றும் மனமக்களின் ஒப்புதலுடனும் இந்த திருமணம் நடைபெற்றதாக அவர் கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.