பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரைக் கொண்ட குழுவின் பரிந்துரையின்பேரில், தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை குடியரசுத் தலைவர் நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் முறையில் சீர்திருத்தம் கோரி தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று இந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை பிறப்பித்துள்ளது.
இதையும் படிக்க.. காணாமல் போகும் கடற்கரைகள்: பேராசைக்குக் கிடைக்கும் பரிசு!
அதன்படி, தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்ய புதிய விதிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு மூலமே தேர்தல் ஆணையர் தேர்வு செய்ய வேண்டும். தேர்தல் ஆணையர் தேர்வு செய்யும் முறையைப் போலவே நீக்கம் செய்யும் நடைமுறையும் இருக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய தலைமை தோ்தல் ஆணையா், தோ்தல் ஆணையா்கள் ஆகியோரை நியமிக்க கொலீஜியம் போன்ற முறையை ஏற்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசஃப் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு விசாரித்தது வந்தது. இந்த வழக்கில் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில், நவ.24-ஆம் தேதி தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாமதமாக தொடங்கிய வாக்குப்பதிவு

திருவாரூா் மாவட்டத்தில் 83.02 சதவீதம் வாக்குப் பதிவு

வாணியம்பாடி அருகே திமுக -அதிமுகவினா் மோதல்

திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்: அமைச்சா் காந்தி நம்பிக்கை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


