நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஷிவமோகா விமான நிலையத்தை தொடக்கி வைக்கிறார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி வரும் திங்கள்கிழமை கர்நாடக மாநிலத்துக்கு வருகை தரவிருக்கிறார். புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஷிவமோகா விமான நிலையத்தை திறந்து வைக்கவிருக்கிறார்.

News image
ஷிவமோகா விமான நிலையத்தை தொடக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
Updated On :7 பிப்ரவரி 2024, 6:36 am

ANI


புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி வரும் திங்கள்கிழமை கர்நாடக மாநிலத்துக்கு வருகை தரவிருக்கிறார். புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஷிவமோகா விமான நிலையத்தை திறந்து வைக்கவிருக்கிறார்.

கர்நாடக மாநிலத்தில் நிறைவுற்ற பல நலத்திட்டப் பணிகளையும் அவர் தொடக்கி வைக்கிறார் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஷிவமோகா விமான நிலையத்தைத் திறந்து வைத்த பிறகு, விமான நிலையத்துக்குள் நடந்து சென்று நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிடவிருக்கிறார். பின்னர். ஷிவமோகா மற்றும் பெலகாவி மாவட்டங்களில் நிறைவுற்றப் பணிகளைத் தொடக்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல்நாட்டுகிறார் பிரதமர் மோடி.

ரூ.450 கோடிச் செலவில் ஷிவமோகா விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்துக்கு 300 பயணிகள் வரை கையாளும் வகையில் விமான நிலையம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.