புது தில்லி: தில்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் நடத்தப்பட்ட அதிநவீன சிகிச்சையால், அலுமினிய உறையோடு மாத்திரையை விழுங்கிய முதியவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.
உணவுக் குழாய்க்குள் சிக்கியிருந்த அலுமினிய உறையோடு மாத்திரையை மிகப் புதுவிதமான என்டோஸ்கோபிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அகற்றியுள்ளனர்.
இதையும் படிக்க.. 3000 ஆண்டுகளுக்கு முன்பே மூளை அறுவைசிகிச்சையா? அதிரும் விஞ்ஞானிகள்
பேராசிரியர் அனில் அரோரா கூறுகையில், மாத்திரையை பாதுகாக்கும் அலுமினிய உறையோடு கவனிக்காமல் முதியவர் விழுங்கிய நிலையில் அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். உடனடியாக என்டோஸ்கோபி செய்யப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அந்த அலுமினிய உறை கூர் முனைகளுடன் இருந்தன. அதனை அப்படியே அகற்றினால் உணவுக் குழாயை சேதப்படுத்திவிடும் ஆபத்துஇருந்தது. எனவே, அதனை வயிற்றுப் பகுதிக்குள் கொண்டு வந்து அங்கிருந்து அதனை அகற்றும்படி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையும் படிக்க.. அதானி குழுமத்தில் எல்ஐசி முதலீட்டு மதிப்பு ரூ.50,000 கோடி சரிவு
பிறகு, என்டோஸ்கோபி வழியாக, மாத்திரையை அதனுள் இருந்து வெளியேற்றி, அலுமினியம் உரையை குறுக்கி சின்னதாக்கி, அதன் கூர் முனைகள் மடிக்கப்பட்டன. பிறகு, வாய் வழியாக அது வெளியேற்றப்பட்டது. மிகவும் இக்கட்டான சூழ்நிலையில், சாமர்த்தியமாக செயல்பட்டு மருத்துவர்கள் குழு, முதியவரின் உயிரை மீட்டதோடு, மிகப்பெரிய அறுவை சிகிச்சையை மேற்கொள்வதில் இருந்தும் தடுத்துள்ளனர் என்கிறார்.
இதுவரை மருத்துவ வரலாற்றில் இதுபோன்ற நிகழ்வு பதிவானதாகத் தெரியவில்லை. இதுபோன்ற பாதிப்பு ஏற்படும்போது, எந்தவிதமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது குறித்த புரிதல்களும் அப்போது இல்லை. ஆனால், நிலைமையை மாற்றி யோசித்ததில் புதிய யுக்தி கிடைத்தது என்கிறார்கள் மருத்துவர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


