அசாமின் குவாஹாட்டியில் கணவர், மாமியாரை கொன்று துண்டுகளாக்கி குளிர்பதனப் பெட்டியில் வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தில்லியில் ஷ்ரத்தா வாக்கர் கொலை வழக்குபோல, நெஞ்சை உருக்கும் சம்பவம் குவாஹாட்டியில் நடந்தேறியுள்ளது.
ஏழு மாதங்களுக்கு முன் குவாஹாட்டியின் நூன்மதி பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட பெண் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதுகுறித்து மூத்த காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
நூன்பதி பகுதியில் கணவர் மற்றும் மாமியாருடன் வசித்து வந்தவர் பந்தனா கலிதா. ஆகஸ்ட் 17, 2022அன்று கலிதா தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து கணவர் அமர்ஜோதி, மாமியார் சங்கரியைத் திட்டமிட்டுக் கொன்றுள்ளார்.
கொலையைத் தொடர்ந்து, கணவர் மற்றும் மாமியாரின் உடலைத் துண்டு துண்டுகளாக்கி குளிர்பதனப் பெட்டியில் சேமித்துவைத்திருந்தார். பின்னர் நான்கு நாள்களுக்குப் பிறகு உடல் உறுப்புகளை மேகாலாயாவின் டாப்கி ஆற்றில் அப்புறப்படுத்தியுள்ளார். இது குவாஹாட்டியில் இருந்து 200 கி.மீ தொலைவில் உள்ளது.
ஆற்றில் உடல் உறுப்புகளைச் சேகரித்த காவல்துறையினர், கடந்த ஏழு மாதங்களாக விசாரணை மேற்கொண்ட நிலையில் கொலை செய்தவர் கலிதா என்று கண்டறிந்தனர்.
சம்பவத்தை அறிந்த அக்கம்பக்கத்தினர் கலிதா கடந்தாண்டு வீட்டைச் சுத்தம் செய்தபோது, வீட்டின் மொட்டை மாடியில் கணவர், மாமியாரின் துணிகளை எரித்ததைக் கண்டதாகவும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கொலையில் ஈடுபட்ட கலிதாவின் நண்பர்களான அருப் தேகா மற்றும் தன்ஜித் தேகா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கலிதாவை கைது செய்து மாமியார் மற்றும் கணவரை எரித்ததற்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை.
தில்லியில் ஷ்ரத்தா கொடூரமாக கொலை செய்யப்பட்டதைப் போன்று குவாஹாட்டியில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


