திபெத்திய பௌத்த மதத் தலைவர் தலாய் லாமாவின் விசுவாசமான நாய் துகா ரூ.1,550 ($20)க்கு விற்பனை செய்யப்பட்டது.
12 வருட காலமாக தலாய் லாமாவின் பாதுகாப்புக்காக துகா என்ற மோப்ப நாய் பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஹிமாச்சல காவல்துறையினரால் ஏலம் விடப்பட்டது.
கடந்த 2010இல் ஏழு மாத குழந்தையாக மோப்ப நாய் துகா ரூ.1.23 லட்சத்துக்கு ராணுவ பயிற்சி மையத்தில் இருந்து வாங்கப்பட்டது. ஆரம்ப பயிற்சிக்குப் பின் தலாய் லாமாவின் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டது.
இதுகுறித்து தலாய் லாமாவின் பாதுகாப்பில் ஈடுபடும் துணைக் காவல் கண்காணிப்பாளர் நிதின் சௌஹான் கூறுகையில்,
வெடிபொருட்கள் குறித்து போலீஸாரை எச்சரிக்க துகாவுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. தலாய் லாமா பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளுக்கு முன் துகா அந்த இடத்தில் ஆய்வு செய்யும்.
தலாய் லாமாவின் மிகவும் நம்பகமான நாய் துகா என்று அவர் தெரிவித்தார்.
தற்போது, தலாய் லாமாவை பாதுகாக்கும் பொறுப்பு ஒன்பது மாத நாயான டாமிக்கு வழங்கப்பட்டுள்ளது. டாமிக்கு மோப்ப நாய்களுக்கான சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில் ரூ.3 லட்சத்துக்கு வாங்கப்பட்டது.
அர்ப்பணிப்புடன் ஒரு ராணுவ வீரர் போல் பணியாற்றிய துகா காது கேட்கும் திறனை இழந்ததால், அது ஏலம் விடப்பட்டது.
தலாய் லாமா இந்தியாவில் மூன்று அடுக்கு பாதுகாப்பைப் பெறும் மிகவும் பாதுகாக்கப்பட்ட நபர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


