நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

அரை மணிநேரம் போதும்! பட்ஜெட் எப்படி இருக்க வேண்டும் எனக் காட்டுவேன்: மம்தா

மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் மத்திய பட்ஜெட்டில் எந்த அம்சமும் இல்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

News image
மம்தா பானர்ஜி (கோப்புப் படம்)
Updated On :7 பிப்ரவரி 2024, 6:23 am

DIN


மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் மத்திய பட்ஜெட்டில் எந்த அம்சமும் இல்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் குறித்து பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை குறித்து நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் எந்த கருத்தும் இடம் பெறவில்லை.  ஏழைகளுக்கு எதிராகவும் நடுத்தர மக்களுக்கு எதிராகவும் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. 

இம்முறை மாற்றியமைக்கப்பட்டுள்ள வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பு எந்த வித பயனையும் அளிக்கப் போவதில்லை.

மத்திய அரசு தயாரித்துள்ள இந்த பட்ஜெட்டில் ஏழைகளுக்கு பலனில்லாததால் இது கருப்பு பட்ஜெட். அரை மணி நேரம் இருந்தால்போதும், ஏழைகளுக்கான பட்ஜெட் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் காட்டுவேன் எனக் குறிப்பிட்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.