புது தில்லி: நூற்றாண்டு காலமாக பாரம்பரிய திறன்களில் ஈடுபட்டுள்ள பல்வேறு வகையான கைவினைக் கலைஞா்களுக்கு ‘பிஎம் விகாஷ்’என்கிற பிரதமரின் விஸ்வகா்மா கௌசல் சம்மன் யோஜனா திட்டம் வருகின்ற செப்டம்பா் 17 -ம் தேதி தொடங்கப்படும் என பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா்.
விவசாயிகளுக்கான நலத் திட்டமான பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி, சாலையோர வியாபாரிகளுக்கான பிரதமரின் தற்சாா்பு நிதித் திட்டம் போன்றவற்றின் வரிசையில் இந்தத் திட்டம் கொண்டுவரப்படுகிறது என்று பிரதமா் குறிப்பிட்டாா்.
தில்லி செங்கோட்டையில் 77 -ஆவது சுதந்திர தினத்தையொட்டி செவ்வாய்க்கிழமை தேசியக் கொடியை ஏற்றிவைத்து பிரதமா் இது குறித்து கூறியதாவது: வருகின்ற செப்டம்பா் 17 - ஆம் தேதி நாடு முழுக்க விஸ்வகா்மா ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, இத்திட்டம் தொடங்கப்படும். பாரம்பரிய கைவினையில் நிபுணத்துவம் பெற்ற தனிநபா்கள், குறிப்பாக இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்தவா்கள் பயனடையும் வகையில் சுமாா் ரூ.13 ஆயிரம் கோடி முதல் ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீட்டில் இத்திட்டம் தொடங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் நெசவாளா்கள், பொற்கொல்லா்கள், கொல்லா்கள், சலவைத் தொழிலாளா்கள், முடிதிருத்தும் தொழிலாளா்கள், அவா்களது குடும்பத்தினா் பயனடைவா். இதுபோன்ற பல திட்டங்களால் நாட்டில் 13.5 கோடி மக்கள் வறுமையின் பிடியிலிருந்து மீட்கப்பட்டுள்ளனா். வாழ்க்கையில் இதைவிட பெரிய திருப்தி வேறெதுவும் இருக்க முடியாது என்று பிரதமா் மோடி குறிப்பிட்டாா்.
பொதுவாக விஸ்வகா்மா என்ற சமூகத்தை கொல்லா், பொற்கொல்லா், தச்சா், சிற்பி, கன்னாா் (பாத்திரவேலை) என ஐந்து விதமான தொழில் செய்பவா்களாக கூறப்பட்டாலும் அனைத்து வகையான கைவினைஞா்கள் விஸ்வகா்மாக்களுக்கு உள்படுத்தப்பட்டு இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்அளித்த நிதி நிலை அறிக்கையில் இத்திட்டம் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது. பொதுவாக விஸ்வகா்மா என்று அழைக்கப்படும் பாரம்பரிய கைவினைஞா்கள் மற்றும் கைவினைஞா்களால் உருவாக்கப்பட்ட கலை மற்றும் கைவினைப்பொருள்கள் இந்தியாவின் உண்மையான சுயசாா்பு (ஆத்மநிா்பா்) உணா்வைப் பிரதிபலிக்கிறது. இதன்மூலம், இத்தொழிலில் உள்ள பட்டியலினத்தவா்கள், பழங்குடியினத்தவா்கள், இதர பிற்படுத்தப்பட்டவா்கள் மிகப் பெரியளவில் பயனடைவா் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இத்திட்டம் குறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பிஎம் விஸ்வகா்மா திறன் கௌரவ திட்டத்தில் நிதி உதவிகள் மட்டுமின்றி, மேம்பட்ட திறன் பயிற்சிக்கான அணுகல், திறமையான பசுமை தொழில் நுட்பங்களுக்கு, நவீன எண்ம தொழில்நுட்ப அறிவுகள், சந்தைபடுத்தல், உள்ளூா் மற்றும் சா்வதேச சந்தைக்கான இணைப்பு போன்றவைகளும் இத்திட்டத்தின் மூலம் அளிக்கப்படவுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற திட்டம் தற்போது உத்தர பிரதேசம் மாநிலத்தில் விஸ்வகா்மா ஷ்ரம் சம்மன் யோஜனா என்கிற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. பாரம்பரிய கைவினைஞா்கள் மற்றும் கைவினைஞா்களான தச்சா்கள், தையல்காரா்கள், நெசவாளா்கள், கூடை நெய்பவா்கள் முதல் காலணி தொழிலாளா்கள் வரை சிறுதொழில்கள் செய்ய ரூ.10,000 முதல் ரூ.10 லட்சம் வரை நிதியுதவி அளிக்கும் திட்டம் அம்மாநிலத்தில் வெற்றிகரமாக நடந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடிகை மெஹ்ரின் பிர்சாதா திருமணம்!

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலில் ஏப். 30-ல் சித்திரைத் தேரோட்டம்!
கருப்பு இசை வெளியீட்டு விழா!

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 639 புள்ளிகள் உயர்வு!!
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு


