சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

அடுத்த 3 வாரங்கள் மிகவும் அபாயகரமானவை: மீண்டும் ஒரு எச்சரிக்கையா?

வரும் வாரம் தீபாவளிப் பண்டிகைக் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், அடுத்து வரும் 2 அல்லது 3 வாரங்கள் மிகவும் அபாயகரமானவை என்று மருத்துவ உலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News image
அடுத்த 3 வாரங்கள் மிகவும் அபாயகரமானவை: மீண்டும் ஒரு எச்சரிக்கையா?
Updated On :1 பிப்ரவரி 2024, 10:35 am

DIN

புது தில்லி: வரும் வாரம் தீபாவளிப் பண்டிகைக் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், அடுத்து வரும் 2 அல்லது 3 வாரங்கள் மிகவும் அபாயகரமானவை என்று மருத்துவ உலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கரோனாவின் உருமாறிய ஒமைக்ரான் பிஎஃப்7 வகை வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இது தற்போது மனிதர்களுக்கு இருக்கும் நோய் எதிர்பாற்றலை விஞ்சும் வகையில் இருப்பதாலும், ஏற்கனவே இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு அதன் ஆற்றல் குறைந்திருக்கும் என்பதும் ஒமைக்ரான் வகை கரோனா மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என்று அஞ்சப்படுகிறது.

இது குறித்து மருத்துவத்துறையினர் கூறுகையில், அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்கள் என்பது இந்தியாவுக்கு மிகவும் அபாயகரமானவை. நம்மைச் சுற்றி இன்னமும் கரோனா வைரஸ் இருந்துகொண்டுதானிருக்கிறது. புதிய புதிய வகையிலான மாற்றம் அடைந்த கரோனா உலகின் பல்வேறு நாடுகளிலும் வேகமாகப் பரவி வருகிறது. 

எனவே, அதிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம் என்று கூற முடியாது. வரும் பண்டிகை நாள்களில் நாம் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது மிகவும் அவசியம் என்கிறார்கள்.

இரண்டு ஆண்டுகளாக நாம் பின்பற்றி வந்த ஒரு சில கட்டுப்பாடுகளையாவது கூட்டமான இடங்களுக்குச் செல்லும் போது பின்பற்றினாலே போதுமானது. 

அதுபோல, கரோனா அறிகுறிகள் இருந்தாலும் உடனடியாக அதற்குண்டான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளுங்கள். கூடுமான வரையில் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

தீபாவளி என்றால் அச்சமா?
தீபாவளி என்பது நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல வகைகளில் கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் இது ஐந்து நாள் பண்டிகை. தமிழகம் உள்பட தென்னிந்திய மாநிலங்களிலோ இது மிகவும் முக்கியப் பண்டிகை. எனவே, சந்தைகளிலும், துணிக்கடைகளிலும் கூடும் மக்களின் எண்ணிக்கை எண்ணில் அடங்காதவை. எனவேதான் இந்த எச்சரிக்கைக்கு பின்னணியில் ஒரு உண்மை இருக்கிறது என்பதை மறுக்கமுடியவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.