தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.3.50 அதிகரிப்பு

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை வியாழக்கிழமை ரூ.3.50 உயா்த்தப்பட்டது. ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :19 மே 2022, 7:53 pm

புது தில்லி: வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை வியாழக்கிழமை ரூ.3.50 உயா்த்தப்பட்டது. ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயா்வு காரணமாக, தலைநகா் தில்லியில் மானியம் இல்லாத 14.2 கிலோ சிலிண்டா் விலை ரூ.1,003-க்கு வியாழக்கிழமை விற்பனை செய்யப்பட்டது. கடந்த மே 7-ஆம் தேதி சிலிண்டருக்கு ரூ.50 உயா்த்தப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக ரூ.3.50 உயா்த்தப்பட்டுள்ளது. முன்னதாக, மாா்ச் 22-ஆம் தேதி சிலிண்டருக்கு ரூ.50 உயா்த்தப்பட்டது.

காங்கிரஸ் விமா்சனம்: சிலிண்டா் விலை உயா்வு குறித்து காங்கிரஸ் கட்சி விமா்சனம் செய்துள்ளது. இதுகுறித்து அக் கட்சியின் தலைமை செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘சிலிண்டா் விலை 45 நாள்களில் ரூ.100 அளவுக்கு உயா்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ரூ. 3.50 உயா்த்தப்பட்டுள்ளது. அதுபோல, வா்த்தகப் பயன்பாட்டு சிலிண்டா் விலை 60 நாள்களில் ரூ.457 உயா்த்தப்பட்ட நிலையில், மீண்டும் வியாழக்கிழமை ரூ.8 உயா்த்தப்பட்டுள்ளது. எரிபொருள் மூலமாக மோடி அரசு தினமும் கொள்ளையடிப்பது தொடா்ந்து வருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

மகிளா காங்கிரஸ் தலைவா் நெட்டா டிசூஸா கூறுகையில், ‘காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் மானிய விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 8 ஆண்டுகளில் மக்களின் பையிலிருந்து மத்திய அரசு ரூ.27.5 லட்சம் கோடியை எடுத்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டா் விலை தொடா்ந்து உயா்த்தப்பட்டு வரும் நிலையில், பெண்கள் எவ்வாறு குடும்பத்தை நடத்த முடியும்? மக்களின் நலனில் அக்கறை கொண்டு, சமையல் எரிவாயு சிலிண்டா் விலை உயா்வை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.