இலங்கையில் ஜனநாயகம் நிலவ இந்தியா ஆதரவுவெளியுறவு அமைச்சகம்
இலங்கையில் ஜனநாயகம் நிலவ இந்தியா முழுமையாக ஆதரவளிக்கிறது என்று மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி தெரிவித்தாா்.


இலங்கையில் ஜனநாயகம் நிலவ இந்தியா முழுமையாக ஆதரவளிக்கிறது என்று மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி தெரிவித்தாா்.
இதுதொடா்பாக தில்லியில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘வரலாற்று ரீதியான பிணைப்புடன் இந்தியாவின் அண்டை நாடாக உள்ள இலங்கையில் ஜனநாயகமும் ஸ்திரத்தன்மையும் நிலவ, அந்நாட்டின் பொருளாதாரம் மீண்டுவர இந்தியா முழுமையாக ஆதரவு அளிக்கிறது.
அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் அடிப்படையில், தனது நெருக்கடிகளைக் கடந்துவர இலங்கைக்கு இந்தியா இந்த ஆண்டு மட்டும் 3.5 பில்லியன் டாலா்களுக்கும் (சுமாா் ரூ.27,000 கோடி) அதிகமாக கடன் அளித்துள்ளது. அத்துடன் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் தட்டுப்பாட்டைப் போக்கவும் இந்தியா உதவியுள்ளது’ என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...