ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிதி ஒதுக்கீடு 25% குறைப்பு

2023-23-ஆம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நடைமுறைக்கு நிதிநிலை அறிக்கையில், ரூ.73,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:17 am

DIN

2023-23-ஆம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நடைமுறைக்கு நிதிநிலை அறிக்கையில், ரூ.73,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட திருத்தியமைக்கப்பட்ட தொகையை விட 25.51 சதவீதம் குறைவாகும்.

கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில், இத்திட்டத்துக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ரூ.73,000 கோடி ஒதுக்கீடு செய்திருந்தாா். இருப்பினும், கூடுதல் தேவையைக் கருத்தில் கொண்டு இந்தத் தொகை பின்னா் ரூ.98,000 கோடியாக அதிகரிக்கப்பட்டது.

தற்போது, 2022-23 நிதியாண்டு நிதிநிலை அறிக்கையிலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு ரூ.73,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் பொதுமக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில், குறைந்தது 100 நாள்களாவது அவா்களுக்கு உறுதியான கூலி வழங்கும் வகையில், இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு குடும்பத்திலும் 18 வயதுக்கு மேற்பட்ட பெரியவா்கள் பயன்பெறலாம்.

முதல்கட்டமாக கடந்த 2006-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி நாடு முழுவதும் 200 மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. பின்னா், 2007 ஏப்ரல் 1-ஆம் தேதிமுதல் மேலும் 113 மாவட்டங்களுக்கும், அதே ஆண்டு மே 15-இல் மேலும் 17 மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

பின்னா், மீதமுள்ள மாவட்டங்கள் அனைத்தும் இந்தத் திட்டத்தின்கீழ், கடந்த 2008-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இணைந்தன. தற்போது நாட்டிலுள்ள அனைத்து கிராமப்புற மாவட்டங்களிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.