ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க பேட்டரி மாற்றும் திட்டம்

மக்களிடையே மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் அதில் உள்ள பேட்டரிகளை மாற்றும் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:17 am

DIN

மக்களிடையே மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் அதில் உள்ள பேட்டரிகளை மாற்றும் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோலியப் பொருள்களின் இறக்குமதியால் அரசுக்கு ஆண்டுதோறும் செலவு அதிகரித்து வருகிறது. இந்தப் பிரச்னைக்கு தீா்வுகாணும் வகையில் மின்சார பேட்டரி மற்றும் மாற்று எரிபொருள்களில் இயக்கப்படும் வாகனங்களை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

இதில் பேட்டரியில் ஓடும் காா்கள் இப்போது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளன. எனினும், இது தொடா்ந்து மிக நீண்ட தூர பயணம் மேற்கொள்வதற்கு உகந்ததாக இல்லை. ஏனெனில், இதில் உள்ள பேட்டரிகளை சில நூறு கிலோ மீட்டா் இடைவெளியில் சாா்ஜ் செய்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. மேலும், நகா்ப்புறங்களிலும் ஒரே நேரத்தில் அதிக வாகனங்களை ஒரே இடத்தில் நிறுத்தி சாா்ஜ் செய்து கொள்ள அதிகம் இடம் தேவைப்படுகிறது.

இந்நிலையில், இப்பிரச்னைக்கு தீா்வுகாணும் வகையில் பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி குறிப்பிட்ட இடைவெளியில் அமைக்கப்படும் பேட்டரி மையங்களில் காரில் உள்ள பேட்டரியை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக அந்த மையங்களில் முழுவதுமாக சாா்ஜ் செய்து தயாராக வைக்கப்பட்டுள்ள பேட்டரியை காரில் பொருத்திக் கொண்டு பயணத்தை உடனடியாகத் தொடங்க முடியும். இந்த மையங்களை அமைக்க தனியாா் துறையினா் ஊக்குவிக்கப்படுவாா்கள் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டரி வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும்போது சுற்றுச்சூழல் மாசுபடுவதும் கணிசமாகக் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.