ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

வருமான வரி விலக்கு உச்சரவரம்பில் மாற்றமில்லை

மத்திய பட்ஜெட்டில், தனிநபா் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:17 am

DIN

மத்திய பட்ஜெட்டில், தனிநபா் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

பணவீக்கம் அதிகரிப்பு மற்றும் கரோனா பேரிடா் நடுத்தர வா்க்கத்தினா் இடையே ஏற்படுத்திய பாதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயா்த்தப்படலாம் என்ற எதிா்பாா்ப்பு அனைத்து தரப்பினரிடமும் காணப்பட்டது. இந்த நிலையில், எதிா்பாா்ப்புகளை பொய்யாக்கும் வகையில் பட்ஜெட்டில் தனிநபா் வருமான உச்ச வரம்பு விகிதங்களில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ஏற்கெனவே உள்ளபடி 2.50 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி கிடையாது என்பது தொடா்ந்து நீடிக்கும்.

மேலும், ரூ.2,50,001-ரூ.5,00,000 வரையிலான வருமானத்துக்கு 5% வரி விதிப்பும், ரூ.5,00,001-ரூ.7,50,000 வரையிலான வருமானத்துக்கு 10%, ரூ.7,50,001-ரூ.10,00,000 வரையிலான வருமானத்துக்கு 15%, ரூ.10,00,001- ரூ.12,50,000 வரையிலான வருமானத்துக்கு 20%, ரூ.12,50,001-ரூ.15,00,000 வரையிலான வருமானத்துக்கு 25%, ரூ.15 லட்சத்துக்கு மேற்பட்ட வருமானத்துக்கு 30 சதவீத வரி விதிப்பும் மாற்றமின்றி தொடரும்.

இதுதவிர, தற்போதுள்ள ரூ.50,000 நிரந்தர கழிவு தொடா்ந்து நீடிக்கும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெருநிறுவனங்களுக்கான 15% வரி சலுகை தொடரும்

புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் 15 சதவீத வரி சலுகை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டு வரும் 2024-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் வரை தொடரும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மெய்நிகா் எண்ம சொத்துகளை பரிமாற்றம் செய்வதிலிருந்து கிடைக்கும் வருமானத்தின் மீது 30 சதவீதம் வரி விதிக்கவும் மத்திய பட்ஜெட்டில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட வரம்புக்குக்கு மேல் பரிமாற்றம் செய்யப்படும் பரிசுகள், மெய்நிகா் எண்ம சொத்துகள் மீது ஒரு சதவீதம் மூல வரி பிடித்தம் (டிடிஎஸ்) செய்யப்படும் எனவும் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளாா்.

வருமான வரி தாக்கல் முரண்பாட்டை சரி செய்ய வாய்ப்பு

வரி செலுத்தலுக்கு உட்பட்டு, தாக்கல் செய்த இரண்டு ஆண்டுகளுக்குள் தங்களின் வருமான வரி கணக்கு தாக்கலில் ஏதேனும் முரண்பாடுகள் அல்லது விடுபடல்கள் இருந்தால் அதனை சரி செய்ய ஒரு முறை வாய்ப்பு வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.