வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

குடித்துவிட்டு பலியானால் இழப்பீடு இல்லை: பிகார் முதல்வர் திட்டவட்டம்

கள்ளச்சாராயம் குடித்தால் உயிரிழப்புதான் ஏற்படும் என்று கூறியிருக்கும் பிகார் முதல்வர் நிதீஷ் குமார், குடித்துவிட்டு பலியானால் இழப்பீடு வழங்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

News image

குடித்துவிட்டு பலியானால் இழப்பீடு இல்லை: பிகார் முதல்வர் திட்டவட்டம்

Updated On :16 டிசம்பர் 2022, 11:00 am

பாட்னா: கள்ளச்சாராயம் குடித்தால் உயிரிழப்புதான் ஏற்படும் என்று கூறியிருக்கும் பிகார் முதல்வர் நிதீஷ் குமார், குடித்துவிட்டு பலியானால் இழப்பீடு வழங்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

வெள்ளிக்கிழமை, பிகார் சட்டப்பேரவையில் உரையாற்றிய மாநில முதல்வர் நிதீஷ் குமார், குடித்துவிட்டு பலியானால், இழப்பீடு வழங்க முடியாது. நாங்கள் சொல்வது என்னவென்றால், குடித்தால் செத்துப்போவீர்கள். குடிப்பதற்கு ஆதரவாகப் பேசுபவர்கள், மக்களுக்கு எந்த நல்லதையும் செய்யப்போவதில்லை என்றும் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

நேற்று செய்தியாளர்களிடம் சப்ரா கள்ளச்சாராய சம்பவம் பேசிய நிதீஷ் குமார், கள்ளச்சாராயம் குடிக்கும் எவர் ஒருவரும் செத்துப்போவார்கள் என்று காட்டமாகக் கூறினார்.

பிகாரில் மதுவுக்கு தடை விதித்திருப்பதற்கு ஆதரவாக பேசியிருக்கும் நிதீஷ் குமார், மாநிலத்தில் மது விலக்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால் ஏராளமான மக்கள் பயன்பெற்றுள்ளனர். பலர் குடிப்பழக்கத்தை விட்டுவிட்டனர் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.