தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

காஷ்மீருக்கு விரைவில் ரயில்  சேவை

2023ஆம் ஆண்டு ஜம்மு -  காஷ்மீரில் பல நல்ல மாற்றங்களை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. அதில் முக்கியமானதாக, காஷ்மீருக்கு நாட்டின் பிற பகுதிகளிலிருந்து ரயில்  சேவை தொடங்கப்படவிருக்கிறது.

News image

காஷ்மீருக்கு விரைவில் ரயில்  சேவை

Updated On :10 டிசம்பர் 2022, 12:28 pm


ஸ்ரீநகர்: 2023ஆம் ஆண்டு ஜம்மு -  காஷ்மீரில் பல நல்ல மாற்றங்களை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. அதில் முக்கியமானதாக, காஷ்மீருக்கு நாட்டின் பிற பகுதிகளிலிருந்து ரயில்  சேவை தொடங்கப்படவிருக்கிறது.

காஷ்மீரில் ரயில் சேவை தொடங்குவதற்கான பல்வேறு இடர்பாடுகள் அகற்றப்பட்டு வருகின்றன.

ஜம்மு பகுதியில் ராம்பன் செக்டாரில் மிகப்பெரிய சுரங்கப்பாதை அமைக்கும் பணியை இந்திய ரயில்வே மேற்கொண்டு நிறைவு செய்திருப்பதும், இதற்கான ஒரு முன்னோட்டம்தான்.

12.75 கிலோ மீட்டர் நீளம் கொண்ட சுரங்கப் பாதை அமைக்கும் பணி நிறைவு பெற்றுவிட்டதாக திட்ட மேலாளர் தெரிவித்துள்ளார். இதற்கு பொறியாளர்கள் டி49 என்று பெயரிட்டுள்ளனர். காஷ்மீர், நாட்டின் பிற பகுதிகளோடு ரயில் மூலம் இணைப்பதற்கான பணிகள் விரைவாக தொடங்க வேண்டும் என்பதற்காகவே, இந்த சுரங்கம் அமைக்கும் பணி மிக விரைவாக செய்து முடிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜம்மு - காஷ்மீரின் பொருளாதாரத்தை உயர்த்தும் விதமாக எந்த காலநிலையிலும் செயல்படும் மற்றும் குறைந்த செலவில் அமைக்கப்படும் ரயில் போக்குவரத்து மூலம், தொழில்துறை வளர்ச்சி பெறும், கச்சா பொருள்களைக் கொண்டு வர, வர்த்தகம், சுற்றுலா, வேலை வாய்ப்பு ஆகியவை மேம்பட உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.